இயர் வியூ: ஃபேஸ்புக்கின் புதிய சேவை!

Posted By: Staff
இயர் வியூ: ஃபேஸ்புக்கின் புதிய சேவை!

 

ஃபேஸ்புக் பற்றிச்சொல்வதற்கு ஒருநாள் போதாது. எழுதுவதற்கு சில கட்டுரைகள் பத்தாது. வியக்கவைக்கும் ஃபேஸ்புக் வின்னைத்தாண்டிய வெற்றியைப் பெற்றுள்ளது யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

 

கோடிக்கணக்கான மக்கள் வெள்ளம், நாள்தோறும் ஃபேஸ்புக் பக்கங்களில் வந்துசெல்கிறது. இந்த மகளுக்காக ஃபேஸ்புக் நிறுவனமும் எதாவது புதுமைகளைச் செய்துகொண்டேயிருக்கிறது. முக்கியமாக தகவல்கள் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாய் உள்ளது.

 

பல பெருமைகளைத் தன்னகத்தே சுமந்துகொண்டிருக்கும் ஃபேஸ்புக் தனது பயனாளர்களுக்கு புதியசேவையைத் தொடங்கியுள்ளது. இதற்கு "ஃபேஸ்புக் இயர் வியூ" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த ஃபேஸ்புக் இயர் வியூ, டைம் லைன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது ஒரு வருடத்தில் நீங்கள் செய்த மொத்தத்தையும் வரிசைப்படுத்துகிறது. புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்கள், மற்றும் டேக்குகளும் இதிலடங்கும்.

 

இந்த சேவையைப்பெற நீங்கள் முதலில் ஃபேஸ்புக்கில் லாகின் செய்யவேண்டும். உங்கள் இயர் வியூவைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot