புதிய ஸ்மார்ட்போனை வழங்கும் ஃபேஸ்புக்!
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் தொழில் நுட்ப நிபுணர்களை அமர்த்துகிறது.
மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதாக தகவல்கள் சமீபமாக வெளி வந்து கொண்டே இருந்தது.
இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்க ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர்களை அமர்த்துகிறது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும் என்றால், முன்பெல்லாம் கம்ப்யூட்டரின் உதவி தேவைப்பட்டது.
ஆனால் இதை விடுத்து ஃபேஸ்புக்கை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வசதியை வழங்கியது ஃபேஸ்புக். இதனால் இந்த ஃபேஸ்புக்கை எல்லோரும் ஸ்மார்ட்போன்களிலேயே எளிதாக பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி அடுத்து அடுத்து புதிய தொழில் நுட்பங்களையும், அப்ளிக்கேஷன்களையும் வழங்கி வரும் ஃபேஸ்புக் ஸ்மார்ட்போன்களையும் தயாரிக்க உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் இணைந்ததாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் மொபைல்போன் தயாரிப்புகளில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது.
தனிப்பட்ட வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கவில்லை என்றால், ஃபேஸ்புக் வெறும் அப்ளிக்கேஷனாக மட்டும் தான் இருக்கும் என்று ஃபேஸ்புக் பணியாளர்கள் கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications