Home
Social media

பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி உறுப்பினர்கள்!

By Super

தற்போதைய சூழலில் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளம் எதுவென்றால் அது பேஸ்புக்காகத்தான் இருக்க முடியும். பேஸ்புக்கில் உறுப்பினராகாத இளைஞர்களே இல்லை என்ற அளவிற்கு உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேஸ்புக் மோகம் பரவி இருக்கிறது.

இந்நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் தனது இணைய தளத்தில் ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி உறுப்பினர்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது பேஸ்புக்கில் உறுப்பினர்களில் 8.7 சதவீதம் பேர் தங்களது உண்மையான தகவல்களைத் தருவதில்லை என்று பிபிசி

கூறியிருக்கிறது.

மேலும் இந்த போலி உறுப்பினர்களை 3 வகையாகப் பிரித்துப் பார்க்கிறது பிபிசி. அதாவது இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் உண்மையானக் கணக்கு வைத்திருந்தாலும், அதற்குத் துணையாக ஒரு போலி கணக்கையும் பேஸ்புக்கில் வைத்கிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி உறுப்பினர்கள்!

அதுபோல் 2 பிரிவினர் தங்களது வர்த்தகம், நிறுவனம் மற்றும் தங்களது விலங்குகள் ஆகியவற்றுக்காக தனியாக பேஸ்புக்கில் கணக்கை வைத்திருக்கின்றனர். 3வது பிரிவினர் ஸ்பேம் செய்திகளை அனுப்புவதற்காகவே பேஸ்புக்கில் தங்களது கணக்குகளை வைத்திருப்பதாக பிபிசி தெரிவித்திருக்கிறது.

இந்த நிலை உயர்ந்து கொண்டே சென்றால் பேஸ்புக்கின் நற்பெயர் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. அதற்கு பேஸ்புக் நடவடிக்கை எடுக்குமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X