Home
Social media

பேஸ்புக் எதிர் காலத்தில் சுடுகாடு தான்- ஆய்வு செல்லும் அதிர்ச்சி.!

அடுத்த 50 ஆண்டுகளில் பேஸ்புக்கில் உயிருடன் இருப்பவர்களின் கணக்குகளை விட இறந்தவர்களின் கணக்குகளே அதிகமாக இருக்கும் என ஓர் ஆய்வு முடிவில் கூறப்பபட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில் பேஸ்புக்கில் உயிருடன் இருப்பவர்களின் கணக்குகளை விட இறந்தவர்களின் கணக்குகளே அதிகமாக இருக்கும் என ஓர் ஆய்வு முடிவில் கூறப்பபட்டுள்ளது.

பேஸ்புக் எதிர் காலத்தில் சுடுகாடு தான்- ஆய்வு செல்லும் அதிர்ச்சி.!

ஒரு பக்கம் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பது குறிப்பிட தக்கது.

இறந்தவர்களின் கணக்கு:

இறந்தவர்களின் கணக்கு:

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 2070ஆம் ஆண்டுக்குள் இறந்துவிடுவார்கள் என்பதால் அப்போது உயிருடன் இருப்பவர்களின் கணக்குகளை விட இறந்துபோனவர்களுடைய கணக்குகள் அதிகமாக இருக்கும் என பிக் டேட்டா அண்டு சொசைட்டி (Big Data and Society) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை கூறுகிறது.

என்ன ஆகும் குழப்பும் கேள்வி:

என்ன ஆகும் குழப்பும் கேள்வி:

"இறந்தபோன இத்தனை பேரைப் பற்றிய தகவல்கள் மீதான உரிமை யாருக்கு? எப்படி இதனை கையாள்வது? எதிர்காலத்தில் வரலாற்று ஆய்வு செய்பவர்களுக்கு பயன்படும் வகையில் என்ன செய்யலாம்? என பல கேள்விகள் இதன் மூலம் உருவாகியுள்ளது" எனவும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

பேஸ்புக் கணக்கு எண்ணிக்கை:

பேஸ்புக் கணக்கு எண்ணிக்கை:

"பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் 140 கோடி பேர் 2100ஆம் ஆண்டுக்குள் இறந்துவிடுவார்கள். இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் 2070ஆம் ஆண்டில் இறந்தவர்களின் கணக்குகள் உயிரோடு இருப்பவர்களின் கணக்குகளின் எண்ணிக்கை மிஞ்சிவிடும்." என்கிறது.

வரும் காலத்தில் பிரச்னை:

வரும் காலத்தில் பிரச்னை:

நம் டிஜிட்டல் எச்சங்கள் வருங்காலத்தில் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் நாம் எல்லோரும் ஒருநாள் இறக்கப்போகிறோம். அப்போது சமூக வலைத்தளங்களில் நாம் விட்டுச் செல்லும் தகவல்களை என்ன செய்வது என்ற சிக்கல் அவர்களுக்கு ஏற்படும் எனவும் அந்தக் கட்டுரை பேசுகிறது.

கார்ல் ஓமன் மற்றும் டேவிட் வாட்சன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
facebook graveyard dead users may outnumber the living by 2070 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X