பேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது.! பாலோவர்கள் வருத்தம்.!
oi
-Rajivganth Gurusamy
பூ என்று பெயர் உடைய பொரியன் நாய்க்குட்டி மனமுடைந்து காணப்பட்டது. இது பொமரேனியன் நாய் குட்டியை வகையை சேர்ந்தது.
தனது நண்பன் பட்டி இறந்தால், மன முடைந்து காணப்பட்ட பூவும் தற்போது இறந்துள்ளது. இந்த ந
பூ என்று பெயர் உடைய நாய்க்குட்டி பூ மனமுடைந்து காணப்பட்டது. இது பொமரேனியன் நாய் குட்டியை வகையை சேர்ந்தது.
தனது நண்பன் பட்டி இறந்தால், மன முடைந்து காணப்பட்ட பூவும் தற்போது இறந்துள்ளது. இந்த நாயை பின் தொடர்வோர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பட்டி இறப்பு:
பட்டி என்ற நாய் கடந்த 2017ம் ஆண்டில் இறந்தது. இது பூவின் உயிர் தோழானவும் இருந்துள்ளது. இதன் அன்று முதல் மனமுடைந்து இருந்துள்ளது இந்த அழகான பூ என்ற நாய்.
பேஸ்புக்கில் தகவல்:
அந்த நாய்க்குட்டியின் பேஸ்புக் பக்கத்தில் பட்டி மறைந்திருப்பது பூவுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பூவின் உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.
பேஸ்புக்கில் 16000 பின் தொடர்கின்றனர்:
பேஸ்புக்கில் பூ-வை 16,000 பேர் பின்தொடர்ந்தனர். தொலைக்காட்சிகளிலும் தோன்றிய இந்த நாய்க்குட்டி, Boo - the life of the world's cutest dog என்ற புத்தகத்தையும் வெளியிட்டது.
பூ மற்றும் பட்டி வாழ்கை:
பூவும் அதன் நண்பர் பட்டியும் 11 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். தனது 14 வயதில் செப்டம்பர் 2017ல் பட்டி உயிரிழந்தது.
மிகுந்த வருத்தம்:
அமெரிக்காவை சேர்ந்த இதன் உரிமையாளர்கள், உறக்கத்திலேயே பூ இறந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சொர்க்கத்தில் வரவேற்றும் பட்டி:
முதலில் பூவிக்கு சோகம் மறைந்து இருக்கும். சொர்க்கத்தில் பூவை பட்டி தான் வரவேற்பான் என்று அவரது உரிமையாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
பட்டியுடன் மகிழ்ச்சியாக இரு பூவே:
"பூ... நாங்கள் உன் மீது நிறைய அன்பு வைத்துள்ளோம். நீ இங்கு இல்லாதது எங்களுக்கு வருத்தமே. என்றாவது சந்திப்போம்... பட்டியுடன் எப்போதும் போல குறும்பு செய்து கொண்டு மகிழ்ச்சியாக இரு," என்றும் அதன் உரிமையாளர்கள் எழுதியுள்ளனர்.
பூ புத்தகத்தை வெளியிடும்போது, பல அமெரிக்க பிரபலங்களை சந்தித்துள்ளது. இந்த நாய்க்குட்டி தங்கள் வாழ்வில் கடினமான நேரங்களில் சிறு மகிழ்ச்சி தந்து உதவியதாக அதனை பின்தொடர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.