தம்பதியினருக்காக புதிய பக்கங்களைத் திறக்கும் பேஸ்புக்

Posted By: Karthikeyan
தம்பதியினருக்காக புதிய பக்கங்களைத் திறக்கும் பேஸ்புக்

பேஸ்புக்கின் இமாலய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட இருக்கிறது. அதுபோல் பேஸ்புக்கின் இணைபவர்களின் எண்ணிக்கையும் ஆசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் திருமண தம்பதியினருக்காக என்று ஒரு தனி பகுதியை தொடங்குகிறது பேஸ்புக்.

இதுநாள் வரை நண்பர்களை இணைக்கும் பாலமாக இருந்து வந்த பேஸ்புக் தற்போது தம்பதியர்களை இணைக்கும் பாலமாக இருக்கப்போகிறது என்று நம்பலாம். இதன் மூலம் இதில் தம்பதியர் தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தம்பதியர் பக்கங்கள் போட்டோக்கள் மற்றும் போஸ்டுகளை மட்டும் தாங்கி இருக்காது. மாறாக ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கருத்துப் பகிர்வு மற்றும் விமர்சனங்கள் போன்றவை இருக்கும். மேலும் இந்த புதிய பக்கங்கள் தம்பதியினரின் அன்பு வாழ்க்கயையை இன்னும் ஆழமாக்கும் என்று பேஸ்புக் நம்புகிறது.

ஆனால் இந்த புதிய பக்கங்களைப் பற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பேஸ்புக் முறையாக அறிவிக்கவில்லை. ஆனால் இந்த புதிய பக்கங்கள் தம்பதியினரைக் கண்டிப்பாக கவரும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot