தகவல்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசுடல் மல்லுக்கட்டும் பேஸ்புக்

|

அமெரிக்க அரசிடம் வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்குவது குறித்த அறிவிப்பை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு தெரிவிப்பது குறித்து பேஸ்புக் மற்றும் அமெரிக்க அரசிடையே நீதிமன்றத்தில் வழக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

தகவல்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசுடல் மல்லுக்கட்டும் பேஸ்புக்

இதுகுறித்து வெளியான தகவல்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று அக்கவுன்ட் கணக்குகளை வழங்க அமெரிக்க அரசு கேட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாரண்ட்களுடன் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அரசிடம் வழங்குவது தொடர்பாக அவர்களுக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கப்பட கூடாது என்ற உத்தரவை கொலம்பியா நீதிமன்ற நீதிபதி பிறப்பித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் பேஸ்புக் தோல்வியுற்றதைத் தொடர்ந்து வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது சார்ந்த பிரச்சனையில் பேஸ்புக்கிற்கு ஆதரவாக மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், ஸ்நாப், டிராப்பாக்ஸ் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் அமெரிக்க ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் பதிவேற்பின் போது நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்குவதில் அரசுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளதற்கும் தொடர்பிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் நடைபெற்று வரும் மோதலில் பேஸ்புக்கிற்கு ஆதரவளித்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் பேஸ்புக் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is fighting against the U.S. government over user data requests.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X