இனி தமிழ் உள்பட 8 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்!

By Super
|

ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஃபேஸ்புக்கை இனி ஹிந்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பஜ்சாபி, பெங்காலி, மராத்தி ஆகிய 8 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலாய், வியட்னாமிஸ் மொழிகளிலும் இனி ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் போன்றவற்றை காட்டிலும், மொபைல்போன்களில் ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் பார்க்க வேண்டும் என்றால் 80 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும், இதில் 35 கோடி பேர் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.

இனி தமிழ் உள்பட 8 இந்திய மொழிகளில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்!

இப்படி ஃபேஸ்புக் பன்படுத்துவோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக்கில் இங்கு கூறப்பட்டுள்ள மொழிகளில் பயன்படுத்த, அதற்கு பிரத்தியேகமாக ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2011 வரை 4 கோடியே 6 லட்சம் பேர் இந்தியாவில் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெளிவாக கூறுகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் வளர்ச்சி அதீத வளர்ச்சியாக உருவெடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X