ஓரினச் சேர்க்கையாளருக்கான "பிரத்தியேக குறியீடு": ஃபேஸ்புக் அறிமுகம்!

Posted By:
ஓரினச் சேர்க்கையாளருக்கான

ஓரினச் சோர்க்கையாளர்களுக்கான பிரத்தியக குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.

ஒருவரின் திருமண விவரத்தினை அடையாளக் குறியீட்டின் மூலம் தெரிவிக்கும் வசதியை கொண்ட ஃபேஸ்புக், அதில் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அடையாள குறியீட்டினையும் அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்கின் புதுமையான மற்றும் ஆழமான இந்த யோசனை மிக பாராட்டிற்குரியது என்று தான் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிக குறைவு.

இன்னும் சொல்லப்போனால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முக்கியத்தவம், சமூகத்தினரால் அதிகம் கொடுக்கப்படுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

உடலாலும், மனதாலும் நிறைய மாறுதல்களை சந்தித்து வரும் ஓரிணச் சேர்க்கையாளர்களின் நிலை அதிக வலியுடையதாகத் தான் எல்லா இடங்களிலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்களுக்கான இடமும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஓர் புதிய அடையாளக் குறியீட்டினை உருவாக்கி இருக்கிறது என்றால், ஃபேஸ்புக் வெற்றியை நோக்கிய நகர்வதற்கான காரணமும் ஓரளவு புலப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot