200 கோடி வாடிக்கையாளர்கள்: பேஸ்புக் வழங்கும் புதிய அம்சங்கள்.!

By: Meganathan S

பேஸ்புக் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் சமீபத்திய அறிவிப்பில் ஒவ்வொரு மாதமும் சுமார் 200 கோடி பேர் பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பேஸ்புக் வாசிகள் அனைவருக்கும் பேஸ்புக் போஸ்ட் மூலம் தனது நன்றியை தெரிவித்தார்.

200 கோடி வாடிக்கையாளர்கள்: பேஸ்புக் வழங்கும் புதிய அம்சங்கள்.!

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பேஸ்புக் மிகப்பெரிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலம் மக்கள் தகவல் பரிமாற்றம் செய்ய பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆன்லைனில் அதிகளவு சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் இத்தகைய பாதிப்பை பேஸ்புக் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் பதிவிட்ட போஸ்ட்டில் தினமும் 175 மில்லியனுக்கும் அதிகமானோர் லவ் ரியாகஷன் பயன்படுத்துகின்றனர், மேலும் 800 மில்லியன் பேர் ஏதேனும் போஸ்ட்களுக்கு லைக் தெரிவிக்கின்றனர். பேஸ்புக் க்ரூப்களை மாதம் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அடுத்து சில நாட்களுக்கு பேஸ்புக் சில அம்சங்களை சேர்த்துள்ளது. இவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

குட் ஆட்ஸ் அப் வீடியோ

பேஸ்புக் தனித்தும் வாய்ந்த பிரத்தியேக வீடியோவினை பேஸ்புக்கில் சேர்த்துள்ளது. இதனை பேஸ்புக் நியூஸ் பீடில் வழங்கப்படுகிறது.

பாராட்டு

நண்பர்களின் போஸ்ட்களுக்கு லவ் ரியாக்ஷன் செய்யும் போதோ அல்லது பிறந்த நாள் அல்லது குரூப்களை உருவாக்கினால் பேஸ்புக் நியூஸ் பீடில் நன்றி தெரிவிக்கும் போஸ்ட் குறிப்பிடப்படும்.

பகிரந்து கொள்வது

பேஸ்புக்கின் facebook.com/goodaddsup-இல் பேஸ்புக் கம்யூனிட்டியில் மக்கள் எவ்வாறு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் மக்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.

Read more about:
English summary
According to the blogpost shared by Facebook, each day, more than 175 million people share a Love reaction, and on average, over 800 million people like something on Facebook.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot