தோண்ட தோண்ட தங்கம்: மலை முழுவதும் தங்க மண்- அள்ளிச் சென்ற கிராம வாசிகள்: மிரள வைக்கும் வீடியோ!

|

காங்கோவில் 60-90% தங்க மணல் உடன் கண்டுபிடிக்கப்பட்ட மலையில் இருந்து கிராமவாசிகள் மலையை தோண்டி தங்கத்தை அள்ளிச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மலையில் சுரங்கத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாபெரும் வெற்றிப் பெற்ற படம் கேஜிஎஃப்

மாபெரும் வெற்றிப் பெற்ற படம் கேஜிஎஃப்

யாஷ் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் கேஜிஎஃப். இந்த பட வெளியீட்டுக்கு பிறகு கேஜிஎஃப் என்ற வார்த்தை மிகப் புகழ் பெற்றது. இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கற்பனை கதையாகும். செல்வம் கொழித்த இந்தியாவில் அதிக வளங்களை கண்டுபிடித்தது வெள்ளையர்கள்தான்.

தற்போதுவரை கேஜிஎஃப்-ல் தங்கம்

தற்போதுவரை கேஜிஎஃப்-ல் தங்கம்

19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பமாகிறது கேஜிஎஃப் வரலாறு. 2001 ஆம் ஆண்டில் நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக கேஜிஎஃப் மூடப்பட்டது. இந்த நிலத்தடி சுரங்கம் ஒரு காலத்தில் தங்க புதையலாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போதும் கேஜிஎஃப்-ல் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை தோண்டியெடுக்க ஆகும் செலவானது தங்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுவதால் அரசு அந்த முடிவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மலையின் மண்ணில் தங்கம்

மலையின் மண்ணில் தங்கம்

அதேபோல் தங்கம் இருக்கும் இடம் குறித்த பல இடங்களில் அறியப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கோவின் லுஹிஹியில் உள்ள கிராமவாசிகள், அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் மண்ணில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எல்ஜி டபிள்யூ 41 மட்டும்தான்: என்ன காரணம் தெரியுமா?ஆகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எல்ஜி டபிள்யூ 41 மட்டும்தான்: என்ன காரணம் தெரியுமா?

டுவிட்டர் கணக்கில் வீடியோ

டுவிட்டர் கணக்கில் வீடியோ

ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரான அஹ்மத் அல்கோபரி தனது டுவிட்டர் கணக்கில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பலர் சில கருவிகளை கொண்டு மலையை தோண்டுவதாக காட்டப்படுகிறது. மறுபுறம் சிலர் தரையை வெறும் கையால் தோண்டும் காட்சி காணப்படுகிறது.

தங்கத்தை பிரித்தெடுத்த கிராமவாசிகள்

மேலும் கிராமவாசிகள் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று மண்ணை கழுவி தங்கத்தை பிரித்து எடுப்பது போன்ற காட்சியும் வைரலாகி வருகிறது. அது மத்திய ஆப்பிரக்கா நாடான காங்கோவில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் போட்டிப்போட்டு தங்க தாது மண்ணை தோண்டி எடுத்து செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

கைகளை பயன்படுத்தி தோண்டிய கிராமவாசிகள்

லுஹிஹி என்ற பகுதியில் உள்ள மலையில் இருக்கும் மண்ணில் 60-90% தங்கத்தாது இருப்பதை அந்த பகுதி கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். இந்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவத் தொடங்கியுள்ளன. இதையடுத்து மண்வெட்டி போன்ற ஆயுதங்களை எடுத்து மலையை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.

சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ

அதில் சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி தங்கத்தாதுவை எடுக்கின்றனர். அதேபோல் சிலர் வெறும் கையால் தங்கத்தாதுவை தோண்டி எடுக்கின்றனர். அனைத்தையும் தங்கள் வீடுகளுக்கு அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். மண்ணை கழுவி தங்கத்தை பிரித்தெடுக்கும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலைப்பகுதிக்குள் நுழைய தடை விதித்த அரசு

மலைப்பகுதிக்குள் நுழைய தடை விதித்த அரசு

இதையடுத்து இதுகுறித்த தகவல் அரசுக்க தெரியவரவே மலையை தோண்டுவதற்கும் உள்ளே நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். அதேபோல் அந்தப்பகுதியில் வைரம், தாமிரம் உள்ளிட்ட தாதுக்களின் வளம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Courtesy: @AhmadAlgohbary

Source: outlookindia.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Entire Mountain Filled With Gold Soil: Video of villagers digging for gold went viral on social media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X