Home
Social media

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.!

ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சல்லிவன் கைப்பற்றிய ஆப்பிரிக்க யானையின் பேரழிவை உணர்த்தும் புகைப்படம் ஒன்று போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதன் சோகமான யதார்த்தத்தைக் வெளிக்காட்டுவதோடு இணையத்திலும் வைரலாகியுள்ளது.

ஆப்பிரக்காவின் தென் பகுதியில்...

ஆப்பிரக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு போட்ஸ்வானா, இங்கு யானைகள் அதிகமாக வேட்டையாடப்பட்டு வருகிறது, மேலும் சமீபத்தில் அங்கு வேட்டையாடப்பட்ட யானை ஒன்றின் புகைப்படம் தறசமயம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது.

கண்களில் கண்ணீர் நிறைகிறது

கண்களில் கண்ணீர் நிறைகிறது

குறிப்பாக போட்ஸ்வானாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த யானை தந்தத்திற்கான தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, இந்த புகைப்படத்தில் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை
ஒன்று தலை வெட்படப்பட்டுப் படுத்திருக்கும் காட்சியைப் பார்பவர் கண்களில் கண்ணீர் நிறைகிறது.

 கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படம் ஆணட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டிக்கும் தேர்வு
செய்யப்பட்டுள்ளது, வேட்டையர்களின் கோர முகத்தை விவரிக்கும் இந்த புகைப்படத்திற்கு வனவிலங்கு பாதுகாவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தடை விலக்கிக் கொள்ளப்பட்டது

தடை விலக்கிக் கொள்ளப்பட்டது

போட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டன.

 சமூக வலைதளங்களில்..

சமூக வலைதளங்களில்..

தற்போது ஜஸ்டின் எடுத்த இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர்.

 ட்ரோன் கேமிரா

ட்ரோன் கேமிரா

இது குறித்து ஜஸ்டின் சல்லிவன்; கூறுகையில், "அந்த இடத்தில் ஒரு யானை கொல்லப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதை பதிவு செய்வதற்கு அங்கே சென்றேன். அங்கே ட்ரோன் கேமிராவை பறக்கவிட்டபோது இந்த போட்டோ பதிவானது. இந்த போட்டோவுக்கு ‘டிஸ்கணக்‌ஷன்' என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்த காட்சியை உயரத்தில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய
உண்மையான வலியை உணர முடியும். டிஸ்கணக்‌ஷன் (துண்டிப்பு) என்றால் துண்டிக்கப்பட்டது யானையின் தும்பிக்கை மட்டுமல்ல. துண்டிக்கப்பட்டிருப்பது மனித இனத்தின் சூழலும்தான்" என்று உருக்கமாக கூறுகிறார்.

 கடந்த மாதம்தான் நீக்கினார்

கடந்த மாதம்தான் நீக்கினார்

தந்தத்திற்காக இப்படி கொடூரமாக ஒரு யானை வேட்டையாடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடானபோட்ஸ்வானாவில், வைர சுரங்கத்துக்கு அடுத்து அதிக வருமானம் கிடைப்பது சுற்றுலாத்துறையில்தான். அந்த நாட்டில் உள்ள வன உயிரினங்களைக் கான பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில்தான், அந்த நாட்டில் வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை
சேதப்படுத்துவதாக விவசாயிகள் முறையிட்டதன் பேரில் போட்ஸ்வானா அதிபர் மோக்வீட்சி மசிசி ஐந்து ஆண்டுகளாக இருந்த யானை வேட்டை தடையை கடந்த மாதம்தான் நீக்கினார்.

வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்

வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்

இதனைத் தொடர்ந்துதான் இந்த யானை வேட்டையும் அங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. யானை வேட்டைக்காரர்கள் யானையைக் கொன்றபின் ரம்பத்தால் அதன் தும்பிக்கையை அறுத்து துண்டித்தபின் தந்தங்களை எடுத்துக்கொண்டு யானையின் உடலை வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்.

Best Mobiles in India

English summary
elephant-poaching-drone-captures-horrific-image-of-mutilated-elephant-with-its-tusks-and-trunk-cut-off:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X