என்னமா இதெல்லாம்: பிரமிடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ- இன்ஸ்டாவில் குவியும் கமெண்ட்கள்!

|

எகிப்து பிரமிடில் மாடல் ஒருவர் பண்டையகால ஆடையை போன்ற உடை உடுத்தி கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு சர்ச்சைக்கு உள்ளான நிலையில் புகைப்படம் எடுத்தவர் மற்றும் மாடல் சல்மா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கெய்ரோவின் ட்ஜோஸர் பிரமிடு

கெய்ரோவின் ட்ஜோஸர் பிரமிடு

கெய்ரோவின் புறநகரில் அமைந்துள்ள ட்ஜோஸர் பிரமிடு முன்பு பழங்கால உடையில் சல்மா என்ற 26 வயது மாடல் கவர்ச்சியான வகையில் போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரமிடு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

பிரமிடு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

பிரமிடு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து மாடலை படம் பிடித்த புகைப்பட கலைஞர் அவமதிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதேபோல் பேஷன் மாடல் சல்மா அல்ஷிமியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஸ்டாவில் வெடித்த சர்ச்சை

இன்ஸ்டாவில் வெடித்த சர்ச்சை

சல்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். சல்மா இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவுன், அவரது ஃபாலோவர்கள் இது எகிப்து பண்டையகால ஆடையல்ல ஆனால் அதை ஒப்பிடுவது போன்று ஆபாசமான ஆடையை உடுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினார்.

GooglePlay 2020: இதுதான் டாப்- சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் கேம்களின் பட்டியல் அறிவிப்பு!GooglePlay 2020: இதுதான் டாப்- சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் கேம்களின் பட்டியல் அறிவிப்பு!

தொல்பொருள் அமைச்சகம் விதித்த விதிகள்

இதையடுத்து எகிப்தின் பண்டைய பாரம்பரியத்தின்படி இல்லாத ஆடைகளை அணிந்து அவமதித்ததற்காக சல்மா கைது செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தொல்பொருள் அமைச்சகம் விதித்த விதிகளை மீறியவதாகவும் சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் எகிப்து தொல்பொருள் கவுன்சில் எகிப்து தொல்பொருள், தனித்துவ பெருமைகள் உடைய இடத்தை அவமதிக்கும் வகையில் தோன்றுவது தண்டனைக்குரியது என்ற கருத்து முன்வைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் சல்மாவின் இந்த புகைப்படத்திற்கு நெட்டிஷன்கள் ஏராளமானோர் எதிர்ப்புகளையும், சிலர் ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படங்கள்

சல்மா இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அவைகள் இன்னும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Pic Courtesy: SocialMedia

Source: india.com

Best Mobiles in India

English summary
Egypt Photographer arrested for taking Photos in a Revealing Ancient Costume in the Pyramid

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X