கர்ப்ப பரிசோதனைக் கிட்டில் 'டூம்' வீடியோ கேம்! இது எப்படி சாத்தியம் குழம்பிய நெட்டிசன்ஸ்!

|

கடந்த சில ஆண்டுகளில், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது எண்ணில் அடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, வீடியோ கேமிங் என்பது பணக்காரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய ஒன்றாக இருந்தது, ஆனால் இப்போதோ, ரூ. 5,000க்கு வாங்கக் கிடைக்கும் ஸ்மார்ட்போனில் ஏராளமான கேமை நீங்கள் விளையாடலாம்.

கர்ப்ப பரிசோதனைக் கருவியில் டூம்(DOOM) கேம்

கர்ப்ப பரிசோதனைக் கருவியில் டூம்(DOOM) கேம்

சமீபத்திய ரெடிட் இடுகை ஒன்று வலைத்தளத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவில் ஒரு கர்ப்ப பரிசோதனைக் கருவியில் ஒருவர் பிரபலமான டூம்(DOOM) கேம் விளையாட்டை விளையாடுவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. பிளாக் அண்ட் வைட் டிஸ்பிளே கொண்ட எளிய கர்ப்ப பரிசோதனை கிட்டில் இது எப்படி சாத்தியம் என்று அனைவரும் குழம்பியுள்ளனர்.

கர்ப்ப பரிசோதனை கிட்டில் எப்படி வீடியோ கேம் விளையாட முடியும்?

கர்ப்ப பரிசோதனை கிட்டில் எப்படி வீடியோ கேம் விளையாட முடியும்?

அதுவும் டூம் கேமை எப்படி விளையாட முடியும் என்று யோசிக்கிறீர்களா? அது எவ்வாறு சாத்தியமானது என்பதை விளக்கமாகக் கூறுகிறோம் வாருங்கள். தொழில்நுட்ப அடிப்படையில், கர்ப்ப பரிசோதனை கிட் 128 x 32 கொண்ட ஒரே வண்ணமுடைய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, மேலும் இது 1 bpp அலைவரிசையைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சிபியு மாற்றங்களுக்குப் பிறகும் கூட டூம் கேமை இயக்க இயலாது என்பதே உண்மை.

டிஸ்பிளே மற்றும் சிபியு வித்யாசம்

இதைச் சாத்தியம் செய்ய அந்த பயனர், கர்ப்ப பரிசோதனைக் கருவியில் டிஸ்பிளே மற்றும் சிபியு இரண்டையும் மாற்றியமைக்க வேண்டியிருந்திருக்கும். தற்போது வீடியோவில் நாம் பார்க்கும் டிஸ்பிளே இயல்பை விட சற்று பெரியது மற்றும் கர்ப்ப பரிசோதனைக் கருவியின் உடலில் பொருத்த முடியாதது என்பதை உறுதிப்பட நாம் கூறலாம்.

உண்மையில் டூம் கேம் தான்!

உண்மையில் டூம் கேம் தான்!

அப்படியே இது இரண்டையும் மாற்றி அமைத்தாலும் கூட டூம் கேமை கர்ப்ப பரிசோதனைக் கருவியில் விளையாட முடியாது. வைரஸ் வீடியோவில் காணப்படும் கட்சியில், உண்மையில் டூம் கேம் விளையாட்டை பயனர் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தான் சாத்தியமானது

இப்படி தான் சாத்தியமானது

மேம்படுத்தப்பட்ட சிபியு மற்றும் டிஸ்ப்ளேவுடன் டூம் கேமை ஒரு லூப் வீடியோவாக பயனர் பிளே செய்திருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது. விடீயோவிற்கு ஏற்றார் போல அவர் கேமை விளையாடுவது போன்று நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பார்ப்பவர்களை நிச்சயம் இது எப்படி சாத்தியம் என்று இந்த வீடியோ யோசிக்கவைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Doom Video Game Played On Pregnancy Test Kit; Netizens Confused Whether It's Real Or Fake : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X