தமிழச்சி குவேனியின் சாபத்தால் தடுமாறும் இலங்கை அரசியல்.!

லங்காவுக்கு வந்த விஜயன் அரியணை ஏற்றது முதல் தமிழீழப் போர், சந்திரிகா, ராஜபக்ஷே, மைத்திரிபால சிறிசேனோ, ரணில் விக்கரம சிங்கே என்று நிலவும் அரசியல் மாற்றத்திற்கு குவேனியின் சாபம் தான் காரணம் இதுகுறித்த

|

இலங்கை தமிழர்களின் பூர்வீகம் என்பது சிங்களவர்களின் மகா வம்சம் என்னும் நூலை படித்தாலே தெரியும். இலங்கைக்கு சிங்களவர்கள் இந்தியாவின் ஒடிசா, வங்களாம் பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது தெளிவாக காணமுடியும்.

 தமிழச்சி குவேனியின் சாபத்தால் தடுமாறும் இலங்கை அரசியல்.!

இன்று வரை இலங்கையில் நடக்கும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு காரணம் குவேனி என்ற தமிழச்சியின் சாபம் தான்று எத்தனை பேருக்கு தெரியும்.

லங்காவுக்கு வந்த விஜயன் அரியணை ஏற்றது முதல் தமிழீழப் போர், சந்திரிகா, ராஜபக்ஷே, மைத்திரிபால சிறிசேனோ, ரணில் விக்கரம சிங்கே என்று நிலவும் அரசியல் மாற்றத்திற்கு குவேனியின் சாபம் தான் காரணம் இதுகுறித்து விரிவாக காணலாம்.

சிங்கபாகு :

சிங்கபாகு :

வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

 விஜயன் வருகை:

விஜயன் வருகை:

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது. விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்")
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய மன்னன் உதவி:

பாண்டிய மன்னன் உதவி:

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்" என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

700 பெண்களை இலங்கைக்கு அனுப்பிய பாண்டியன்:

700 பெண்களை இலங்கைக்கு அனுப்பிய பாண்டியன்:

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு" என்று கூறுகிறான்.

ராஜகுமாரியை மணம் முடித்தல்:

ராஜகுமாரியை மணம் முடித்தல்:

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா" என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்."

குவேனி சாபம்:

குவேனி சாபம்:

குவேனியும் அரச வசம்சா வழியாகவும் இருந்தால், மேலும் குவேனியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த குவேனி சாபம் விடுகிறாள். இலங்கையில் சிங்கள சந்ததிகள் யாராலும் நிலையான அரியணையில் அமர முடியாது என்று சாபம் விடுகிறாள்.

இதனாலே என்னவோ இன்று வரை பல்வேறு அரசியலில் பல்வேறு சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆட்சியும் கலைக்கப்பட்டு வருகின்றது.

தபால் தலை வெளியீடு:

தபால் தலை வெளியீடு:

1956-ல் விஜயனின் வருகை" என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்" என்று கூறினார்கள். இதன் பிறகு தபால் தலை வாபஸ் பெறப்பட்டது.

ஈழப் போர் பிரச்னை:

ஈழப் போர் பிரச்னை:

சாபம் போலவே தமிழர்களின் உரிமைக்காகவும், சிங்கள அடக்கு முறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தால், பல்வேறு முறை ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் ஜெயவர்த்தேனே, ரனசின்ஹே, சந்திரிகா, மைத்திரிபால சிறிசேனா, ராஜபக்ஷே ஆகியோர் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது.

ரணில்விக்கரம சிங்ஹே- சிறிசேனா முறிவு:

ரணில்விக்கரம சிங்ஹே- சிறிசேனா முறிவு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கரம சிங்ஹே- சிறிசேனா இடையே பிளவு ஏற்பட. இலங்கையில் எதிர்கட்சியாக இருந்த ராஜபக்ஷேவை திடீரென பிரதமர் ஆக்கினார் சிறினேசா.

இதனிடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் பிறகு அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்கரம சிங்ஹேவுக்கு மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ராஜபக்ஷே பிரதமர் ஆனது குறித்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. இதில் நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ரணில் விக்கரமம சிங்ஹேவுக்கு ஆதரவுகரம் நீட்டின. இதன் பிறகு இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டுவிட்டரில் மலிந்த ராஜபக்ஷே:

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதில்லை என்று, பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என்று, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான மிலிந்த ராஜபக்ஷ, 'ட்விட்டர்' பக்கத்தில் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

ராஜபக்ஷே வழிபாடு:

மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி இலங்கையில் உள்ள சைவ தலங்களில் வழிபாடு நடத்தி வருகின்றார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

இலங்கை அரசியலில்ல அடுத்தது என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக பேசப்படுகின்றது. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்காணித்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Disagree between Mahinda Rajapaksa - Maithripala Sirisena : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X