ஏடிஎம் இயந்திரத்தை அடித்து துவம்சம் செய்த லாரி டிரைவர்!
திண்டுக்கல் அருகே ஏடிஎம் இல் பணம் எடுக்க முயன்று, பணம் வராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை வெறித்தனமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு பகுதியில், லாரி டிரைவர் அவசரத்திற்குப் பணம் எடுக்க முயன்று, அப்போது பணம் வராமல் போனது. ஏடிஎம்மில் பணம் வராமல் போன ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை வெறித்தனமாக தாக்கியுள்ளார்.
ஏடிஎம் இயந்திரத்தை முதலில் காலால் உதைத்துள்ளார். பின்னர், ஆத்திரம் தீராமல் அருகிலிருந்த கல்லை தூக்கி ஏடிஎம் இயந்திரத்தின் மீது தூக்கிப்போட்டு ஏடிஎம் இயந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார். லாரி டிரைவர் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தைப் போட்டுத் தாக்கிய வீடியோ பதிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது.

கிடைத்த சிசிடிவி ஆதாரத்தை வைத்து, போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். லாரி டிரைவர் அடித்து உடைத்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.


Click it and Unblock the Notifications