Home
Social media

கூகுள், பேஸ்புக்கிற்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!

By Karthikeyan
கூகுள், பேஸ்புக்கிற்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!

கூகுள், பேஸ்புக் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. தற்போது இந்தியாவில் கூகுள், பேஸ்புக்கிற்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான கே.என். கோவிந்தாச்சார்யா பேஸ்புக் இந்தியா ஆகிய நிறுவனத்தின் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கின்றார்.

தனது மனுவில், பேஸ்புக் இந்தியா தனது இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அமெரிக்காவில் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்துகிறது. ஆனால் அதற்காக இந்திய அரசுக்கு அந்நிறுவனம் உரிய வரி செலுத்துவதில்லை. மேலும் இதை மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை என்று ஆளும் காங்கிரஸ் அரசையும் சாடியிருக்கிறார்.

அந்த வழக்கை விசாரனைக்காக ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் பேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 4 வாரங்களுக்குள் டெல்லி உயர்நீதி மன்றத்திற்கு போஸ்புக் தனது பதில்களை அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதுபோல் 13 வயதிற்குட்பட்டவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க இருக்கும் பேஸ்புக்கின் திட்டத்தையும் கண்டித்திருக்கிறார் கோவிந்தாச்சார்யா. மேலும் சமூக வளைத்தளங்களுக்கு இந்தியாவில் ஒரு முறையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X