யார் இந்த டான்சிங் கானா பால்பேரர்கள்! சமூக வலைத்தளம் முழுதும் இவர்களின் ஆட்டம் தான்!

|

கொரோனா வைசரின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவின் பீதிதான் உலகம் முழுதும் இப்பொழுது அதிகமாகியுள்ளது. மக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உலகத்தின் பல நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து சமூக பரவலைத் தடுக்க முயன்று வருகின்றனர்.

சவப்பெட்டியுடன் நடனமாடும் வீடியோ

சவப்பெட்டியுடன் நடனமாடும் வீடியோ

இந்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி வீட்டிற்குள் பொழுது போகாமல் ஸ்மார்ட்போன் நோண்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இவர்களை நிச்சியம் தெரிந்திருக்கும். சமூக வலைத்தளத்தில் கொரோனாவின் கோரத்தை எளிதாக விளக்கக் கூடிய வீடியோவாக இவர்களின் வீடியோ வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கொரோனா பரவுதலைத் தடுக்க வீட்டில் இருங்கள் இல்லையென்றால் என்ற வாக்கியத்துடன் இவர்கள் சவப்பெட்டியுடன் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

ஒன்றாக உடை அணிந்து சவப்பெட்டியுடன் நடனமாடும் இவர்கள் யார்?

ஒன்றாக உடை அணிந்து சவப்பெட்டியுடன் நடனமாடும் இவர்கள் யார்?

கானா என்ற நாட்டில் இந்த குழு, சவப்பெட்டியுடன் நடனமாடும் வித்தையை ஒரு தொழிலாகவே செய்து வருகிறது. நமது ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் பிணத்திற்கு முன்பு நடனமாடிக்கொண்டே ஊர்வலம் போவாம் அல்லவா அதே போன்ற பழக்கம் அந்நாட்டு மக்களிடமும் இருக்கிறது. இறந்தவரின் இறுதி யாத்திரை சந்தோஷமாக அமைய வேண்டும் என்பதற்காக இவர்களை புக் செய்து இறுதி யாத்திரையை மரியாதையுடன் சிறப்பிக்கின்றனர் கானா நாடு மக்கள்.

Network சிக்கலிலிருந்து விடுபட லேட்டஸ்ட் வழி - உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!Network சிக்கலிலிருந்து விடுபட லேட்டஸ்ட் வழி - உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

டான்சிங் கானா பால்பேரர்கள்

கானா நாட்டில் இறந்தவர்களின் இறுதி யாத்திரை ஒரு முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இறந்தவர்களின் இறுதி யாத்திரையைச் சிறப்பிக்க, இந்த கானா பால்பேரர்கள் என்ற குழு தனித்துச் செயல்பட்டு வருகிறது. இவர்களைக் கானா பால்பேரர்கள் என்று அழைப்பதாக இந்த குழுவின் தலைவராக இருக்கும் பெஞ்சமின் ஐடூ கூறினார். சரியான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் இந்த முயற்சியைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூரில் துவங்கி உலக பேமஸ் ஆன ஆட்டம்

உள்ளூரில் துவங்கி உலக பேமஸ் ஆன ஆட்டம்

முதலில் உள்ளூரில் துவங்கிய இவர்களின் ஆட்டம், மூன்று வருடங்களில் உலகம் முழுதும் பரவி விட்டது. கானா பால்பேரர்களை இறுதி யாத்திரைக்காக புக்கிங் செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம், இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும்? மரியாதையுடன் இயல்பாகவா அல்லது அனைவரும் பார்த்து ரசிக்கும்படி தோரணையாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்டு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே பெஞ்சமின் ஐடூ உடன் பால்பேரர்களின் குழு செயல்படுகிறது.

அப்பவே சொன்ன பில்கேட்ஸ்., முன்னரே வீட்டு அடித்தளத்தில் உணவை சேமித்த பில்கேட்ஸ் மனைவி!அப்பவே சொன்ன பில்கேட்ஸ்., முன்னரே வீட்டு அடித்தளத்தில் உணவை சேமித்த பில்கேட்ஸ் மனைவி!

இவர்களுக்கு ஆன்லைன் புக்கிங் கூட இருக்கா?

சவப்பெட்டியுடன் இவர்கள் நடனமாடுவதைக் கண்டு கானா நாட்டில் இவர்களைப் பலரும் புக்கிங் செய்யத் துவங்கிவிட்டனர். இதற்குப் பின் தன் தொழிலை விரிவுபடுத்த நினைத்த தலைவர் பெஞ்சமின் ஐடூ, வலைத்தளத்தில் புக்கிங் செய்வதற்கான வசதியையும் அறிமுகம் செய்து இப்பொழுது உலக பிரபலமாகியுள்ளனர். லாக்கடவுன் காலத்தில் இவர்கள் சவப்பெட்டியைத் தூங்கிக்கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோ வைரல் ஆகியது.

உண்மையில் இவர்கள் வைரல் ஆகியது எப்பொழுது தெரியுமா?

உண்மையில் இவர்கள் வைரல் ஆகியது எப்பொழுது தெரியுமா?

உண்மையில் இவர்களின் இந்த நடனம் 2016ம் ஆண்டே சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி உலகை ஒரு ரவுண்டடு அடித்துவிட்டது. அதற்குப் பின் மீண்டும் 2017ம் ஆண்டில் இவர்களின் வீடியோ மிக பிரபலமடைந்தது. பின் இப்பொழுது மீண்டும் 2020ம் ஆண்டில், லாக்கடவுனில் வீட்டிற்குள் இருக்கும் மக்கள் டிக்டாக் முதல் வாட்ஸ்அப், பேஸ்புக், மீம்ஸ் என அனைத்து பக்கமும் இவர்களை பிரபலமைடையச் செய்து வருகின்றனர்.

Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

ஒழுங்கா வீட்டில் இருங்கள் அல்லது எங்களுடன் நடனமாடுங்கள்

ஒழுங்கா வீட்டில் இருங்கள் அல்லது எங்களுடன் நடனமாடுங்கள்

பிரேசில் போன்ற சில நாடுகளில் இவர்களின் படங்களைப் பல இடங்களில் உள்ள விளம்பர பலகைகள், கார் ஸ்டிக்கர்கள் மற்றும் பிளெக்ஸ்களில் நீங்கள் காணலாம், இவர்களின் படங்களை அந்நாட்டு விளம்பர நிறுவனங்கள் வீதிகளுக்கு நகர்த்தியுள்ளன, இந்த சவப்பெட்டி நடனக் கலைஞர்களின் படம் பெரிதாக அச்சிடப்பட்டு அதன் கீழ் 'ஒழுங்கா வீட்டில் இருங்கள் அல்லது எங்களுடன் நடனமாடுங்கள்'. என்ற தலைப்பில் கேளிக்கையுடன் மக்களுக்கு விழிப்புணர்வைப் பகிர்ந்து வருகின்றனர்.

சிறப்புடன் விறைப்பாக எச்சரிக்கைவிடுத்த பெஞ்சமின் ஐடூ

இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் அமைதியாக வீட்டில் அடங்கி இருக்காவிடில் எங்களுடன் நடனமாட வேண்டிய சூழ்நிலை உருவாகும், எனவே வீட்டிற்குள் இருங்கள் என்று சிறப்புடன் விறைப்பாக எச்சரிக்கையை வைக்கிறார் கானா பால்பேரர் குழுவின் தலைவர் பெஞ்சமின் ஐடூ. சமூக வலைத்தளத்தில் இப்பொழுது இவர்களின் ஆட்டம் இன்னும் கலைகட்டத் துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Dancing Ghana Pallbearers Memes Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X