அது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்!

|

மனிதர்கள் அடித்த டார்ச் வெளிச்சத்தை பார்த்து லாவகமாக மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டு அசையாமல் நிற்கும் குட்டி யானையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வியக்கவைக்கும் விலங்குகள்

வியக்கவைக்கும் விலங்குகள்

குரங்குகளின் சேட்டைகளில் சில நம்மை வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும். குரங்கு மட்டுமல்ல பொதுவாக சில விலங்கினங்களே நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு நெகிழ வைக்கும்.

செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள்

செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள்

வீட்டில் மனிதர்கள் மேற்கொள்ளும் செயலைவிட செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் வியக்கவைப்பதோடு பிரமிப்படைய வைக்கும் விதமாக இருக்கும்.

குழந்தைகளை கவர்ந்த விலங்குகள்

குழந்தைகளை கவர்ந்த விலங்குகள்

குழந்தைகளை கவர்ந்த பல விலங்கினங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று யானை. உருவத்தில் பெரியது என்றாலும் சேட்டைகள் செய்யும் போது குழந்தையாகவே மாறிவிடும். அதன்படி குட்டி யானையின் க்யூட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சபாஷ் உங்களுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருக்கு:இதை மட்டும் செய்தால் போதும்-பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கலகலப்பு பட காட்சி

கலகலப்பு பட காட்சி

கலகலப்பு படத்தில் ஒரு காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும் அதில் வாத்தியார், மண்டகசாயம், திமிங்கலம், பேய் என்ற நான்கு பேரும் எதிரணியினர் தாக்க வருவதை அறிந்து பதில் தாக்குதல் கொடுக்க லாவகமாக மறைந்திருப்பர். அதில் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு உடல் முழுவதும் வெளியே இருக்கும். அதை பார்த்த ஹோட்டல்காரர் ஒருவர் வாத்தியாரிடம் போட்டுக் கொடுக்க வாத்தியார் அவர்களை சத்தம் போட்டு உடலை உள்ளே இழுக்கச் சொல்வார். இந்த காட்சி அனைவரும் அறிந்ததே. அதேபோல் இங்கு நிஜத்தில் ஒரு யானை செய்துள்ளது.

2000-த்துக்கும் மேற்பட்ட யானைகள்

2000-த்துக்கும் மேற்பட்ட யானைகள்

தாய்லாந்து நாட்டில் 2000-த்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. யானைகள் அந்த பகுதியில் உள்ள விளைச்சல் நிலத்தில் புகுந்து சேதப்படுத்தி வந்த சம்பவம் தொடர்கதையாக இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டார்ச் வெளிச்சத்தை பார்த்த குட்டியானை

டார்ச் வெளிச்சத்தை பார்த்த குட்டியானை

அந்த சமயத்தில் வடக்கு தாய்லாந்து பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் யானை புகுந்த சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அங்கு கரும்பு திண்ண குட்டியானை ஒன்று வந்துள்ளது. டார்ச் வெளிச்சத்தை பார்த்ததும் குட்டியானை லாவகமாக அங்கிருந்த மின்கம்பத்தின் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் நின்றுள்ளது.

மின்கம்பத்தில் பின்னால் ஒளிந்துக் கொண்ட குட்டியானை

மின்கம்பத்தில் பின்னால் ஒளிந்துக் கொண்ட குட்டியானை

இதை பார்த்த காவலர் ஒருவர் புகைப்படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. நாம் அந்த கம்பத்தைவிட பெரிதாக இருக்கிறோம் என்று அறியாத அந்த குட்டியானை குழந்தையை போல் க்யூட்டாக ஓடி ஒளிந்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் பலரையும் கவர்ந்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cute Elephant Photos Viral in Social Media: Elephant Hide Behind Electric Post

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X