Home
Social media

எலன் மஸ்க்கின் டுவிட்டர் பக்கத்தில் போலி நபர்கள் மீண்டும் கைவரிசை!

“ நிறுவனத்தின் மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக, பணம் செலுத்தும் முறைக்காக பிட்காய்ன் மற்றும் எத்திரயம் (Bitcoin and Ethereum) முறைகளை அறிமுகப்படுத்துகிறோம்.

By Lekhaka

தன்னுடைய பயனாளர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள், ஆள்மாறாட்டம் செய்து உள்நுழைபவர்கள் போன்றோரைத் தடுப்பதற்காக டுவிட்டர் நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதும், கடந்த வியாழக் கிழமையன்று, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்கினுடைய டுவிட்டர் கணக்கில், ஒருவர் உள் நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

எலன் மஸ்க்கின் டுவிட்டர் பக்கத்தில் போலி நபர்கள் மீண்டும் கைவரிசை!

உண்மையான எலன் மஸ்க் தன்னைப் பின்தொடர்பவர்களிடம் கவித்துவமாய் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், போலியாக எலன்மஸ்க் என்று தன்னை அடையாளப்படுத்தி எலனுடைய டுவிட்டர் பக்கத்தை இயக்கியுள்ளார் ஒருவர். போலியாக நுழைந்த அந்த நபர், தன்னைப் பின்தொடர்பவர்களை, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து இலாபம் அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்ஸா

டெல்ஸா

" நீங்கள் எல்லோரும் இப்பொழுது அறிந்துள்ளதைப் போல, மிக விரைவில் டெல்ஸா (Tesla) நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக மாற்றவிருக்கிறோம். நிறுவனத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளோம். நிறுவனத்தை விரும்பிய வகையில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்த முடிவு அவசியமாக உள்ளது" என்னும் தகவலை போலியான நபர் எலன் மஸ்க்கின் பெயரில் பகிர்ந்துள்ளார்.

பிட்காய்ன்

பிட்காய்ன்

" நிறுவனத்தின் மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக, பணம் செலுத்தும் முறைக்காக பிட்காய்ன் மற்றும் எத்திரயம் (Bitcoin and Ethereum) முறைகளை அறிமுகப்படுத்துகிறோம். நிறுவனத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகளுள் இதுவும் ஒன்று" எனவும் போலி நபர் தெரிவித்துள்ளார்.


தன்னுடைய பெயரில் போலி நபர் டுவிட்டரில் நுழைந்ததை அறிந்த எலன் மஸ்க் இன்னும் இது குறித்துப் பதில் அளிக்கவில்லை.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெல்ஸா நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள எலன் மஸ்க்கினுடைய டுவிட்டர் பக்கத்தில் இது போன்று போலி நபர்கள் நுழைந்து அவரைப் பின்தொடர்பவர்களைத் திசை திருப்பும் நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.


இது தொடர்பான புகார்ப் பதிவுகளை எலன் மஸ்க் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முன்னர் வளியிட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த டுவிட்டர் நிறுவனம், இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க தொழில் நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.

நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க் டைம்ஸ்

"ஒருவருடைய கணக்கில் நுழைந்து அவரைப் பின்தொடர்பவர்களுக்குத் தவறான தகவல்களைத் தரும், இது போன்ற போலியான பதிவுகளைத் தடுப்பதற்காக மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்." என தி வெர்ஜ் (The Verge) என்னும் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் பேட்டி அளித்த எலன் மஸ்க் புலம்பித் தீர்த்துவிட்டார். டெஸ்லா நிறுவனத்தில் பணிப்பளுவின் காரணமாக தான் அனுபவித்து வரும் சிரமங்களை குறித்து வருத்தத்தோடு தெரிவித்திருந்தார். டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி இலக்கை அடைவதற்காக வாரத்திற்கு 120 மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகத் தன்னுடைய சகோதரரின் திருமணத்தைத் தவறவிட்டதாகவும், பிறந்த நாளைக் கூட அலுவலகத்தில் கொண்டாட வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

11 சதவிகிதம்

11 சதவிகிதம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். டெஸ்லா நிறுவனத்தின் நன்மை கருதி அதனை தனியார் நிறுவனமாக மாற்றப் போவதாகக் கூறியிருந்தார்.


எலன் மஸ்க்கின் அறிவிப்பு டெஸ்லா நிறுவனத்தின் பங்கு வணிகத்தை அதிரடியாக உயர்த்தியது. ஏறக்குறைய 11 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது. நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த இவருடைய பேட்டிக்குப் பிறகு உயர்ந்த பங்குகள் பழைய நிலைக்குத் திரும்பின.

Best Mobiles in India

English summary
Crypto hackers attack Elon Musk's Twitter account again: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X