உலகினரை உற்று நோக்கவைத்த இந்திய கலைஞரின் விவசாய ஓவியம்! கூகுள் மேப் வேணும் இதை பார்க்க!

|

மகாராஷ்டிராவை சேர்ந்த மங்கேஷ் நிபங்கர் என்ற ரங்கோலி கலைஞரின் புதிய கலைப் படைப்பு இந்தியர்களை மட்டுமின்றி அனைத்து நாட்டவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

உலகினரை உற்று நோக்கவைத்த இந்திய கலைஞரின் விவசாய ஓவியம்!

இவர் உருவாகியுள்ள கலைப் படைப்பை வெறும் கண்களால் நேரடியாகப் பார்க்க இயலாது. இவரின் படைப்பைப் பார்க்க சேட்டிலைட் மற்றும் கூகுள் மேப் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஓவியம்

விவசாயிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஓவியம்

அப்படி என்ன செய்தார் இந்த கலைஞர் என்று தானே கேட்கிறீர்கள், வானம் பார்த்து ஏர் பிடித்து விவசாயம் செய்வதே கடினம் என்ற நிலையில், அதில் ஓவிய கலைத்திறனையும் புகுத்திப் பிரமிப்பான கலைப் படைப்பை விவசாயிகளின் உதவியுடன் உருவாக்கி இருக்கிறார் இந்த ஓவியக் கலைஞர்.

6 ஏக்கர் பரப்பளவில் சத்ரபதி சிவாஜியின் உருவம்

6 ஏக்கர் பரப்பளவில் சத்ரபதி சிவாஜியின் உருவம்

மகாராஷ்டிராவின், லாதூர் மாவட்டத்தில் உள்ள நிலங்கா கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 2.4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமிக்க வைக்கும் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை இவர் விவசாயம் செய்து உருவாக்கி இருக்கிறார்.

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

 2,500 கிலோ விதைகள் பயிரிட்ட ஓவியர்

2,500 கிலோ விதைகள் பயிரிட்ட ஓவியர்

பிப்ரவரி 19, 2019 ஆம் தேதி நடைபெற்ற சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு தான் மங்கேஷ் நிபங்கர் இந்த ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஓவியத்தைச் செய்து முடிக்க சுமார் 2,500 கிலோ விதைகளை இவர் காலி நிலத்தில் பயிரிட்டுச் செய்து முடித்திருக்கிறார்.

பசுமையுடன் மாவீரன் சத்ரபதி சிவாஜி

சிவாஜி ஜெயந்தி தினத்திற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்பே, இந்த ஓவியத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்திருக்கிறார். சரியாகச் சிவாஜி ஜெயந்தி நாள் அன்று, அவர் பயிரிட்ட விதைகள் எல்லாம் பச்சை நிறத்தில் துளிர்விட்டு மாவீரன் சத்ரபதி சிவாஜியின் உருவத்தைப் பசுமையுடன் கச்சிதமாக உருவாக்கி இருக்கிறார்.

அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

கச்சிதமான கலை நுணுக்கங்கள்

கச்சிதமான கலை நுணுக்கங்கள்

மங்கேஷ் நிபங்கர், சிறிய கலை நுணுக்கங்களைக் கூடவிட்டுவைக்கவில்லை, சிவாஜியின் தோற்றம், தலைப்பாகை, பாசி, நகைகள் மற்றும் அவரின் உருவப்படத்தைச் சுற்றி ஒரு சட்டகத்தைக் கூட உருவாக்கி, அது ஒரு ஓவியம் போலத் தோற்றமளிக்கச் செய்திருக்கிறார்.

கூகுள் மேப்பில் உள்ள சேட்டிலைட் மோடு மிக அவசியம்

இவர் உருவாகியுள்ள இந்த படைப்பைப் பார்க்கக் கூகுள் மேப்பில் உள்ள சேட்டிலைட் மோடு மிக அவசியம், இதைப் பயன்படுத்தி மட்டுமே மிகத் துல்லியமாக இந்த ஓவியத்தைப் பார்க்க முடியும். பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் பற்றி, தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவினால் இந்த கலைஞனைப் பற்றி உலகம் முழுதும் தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!

ஓவியத்திற்கான கூகுள் மேப் லிங்க் கீழே

ஓவியத்திற்கான கூகுள் மேப் லிங்க் கீழே

தற்பொழுது இவர் வரைந்துள்ள இந்த ஓவியத்திற்கான வீடியோ பதிவு பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது. இவர் வரைந்துள்ள இந்த படைப்பை நீங்களும் கூகுள் மேப்பில் காண இங்கே கிளிக் செய்யுங்கள். சத்ரபதி சிவாஜி ஓவியம்.

Best Mobiles in India

English summary
Crop Artist Creates Huge Portrait Of Chhatrapati Shivaji That Only Can Be Seen Using Google Maps Satellite : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X