'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

By Jeevan
|

ஹேக் என்ற வார்த்தை இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஹேக் செய்வது சிலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அல்லது தொழிலாகக்கூட இருக்கலாம்.

சில ஹேக்கர்கள் இணையதளங்களை ஹேக் செய்வது பணத்தை குறிவைத்ததாக இருக்கலாம். சிலர் வெறுமனே தனது 'கெத்தை' காட்டுவதற்காக செய்கிறார்கள்.

ஹேக் செய்வதென்பது ஒரு மிகப்பெரிய குற்றமே! ஹேக் பற்றி தெரிந்துகொள்வது கூட சில சமயங்களில் குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் நாங்கள் இங்கே வெளியிட்டுள்ள தகவல்கள் இதுநாள்வரையிலும் நடந்த ஹேக்களில் மிகவும் பிரபலமானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளோம்.

More Mobile phone pictures

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள் : பிப்ரவரி 25, 2011

ஃபைன் கீல் ஒரு ஈரானைச்சேர்ந்த அரசியல் கட்சி. 2011ல் தேர்தல் வரும் தருவாயில் இக்கட்சியானது தனக்கென இணையதளமொன்றை ஆரம்பித்தது.

அந்த வெப்சைட்டை ஹேக் கர்கள் ஆக்கிரமித்து மட்டுமல்லாமல் பின்வரும் செய்தியையும் வெளியிட்டிருந்தார்கள்.
"பாருங்கள் மக்களே! தங்களது கட்சி இணையதளத்தை கூட பாதுகாப்பாக வைக்காதவர்களா, உங்களை ஆளப்போகிறார்கள்? விழித்திருங்கள்."

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள் : செப்டம்பர் 9, 2009

ஆஸ்திரேலியாவில் 2007ல் அப்போதைய தகவல்தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ஸ்டீபன் மைகேல் கோன்ராய் என்பவர் ஒரு ஆணை பிறப்பித்தார். அதாவது, சிறுவயதினர் தொடர்பான 'நீலப்படங்கள்' இணையதளங்களில் வரக்கூடாது. அப்படி வெளியிடும் இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதை செய்தும் காட்டினார்.

அதற்கு பழிவாங்கும் விதமாகவே, 2009ல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்தனர்.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள்: பிப்ரவரி 2010,

இந்த தாக்குதலும் ஆஸ்திரேலிய அரசாங்க இணையதளத்தை குறிவைத்தே நடத்தப்பட்டது. இந்த ஹேக்கின் பெயரே சற்றே "ஏ" வாகத்தான் இருக்கும்.

பெண்கள் சார்ந்த விபச்சாரத்தை கண்டித்த அரசை எதிர்த்தே இந்த ஹேக் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சில நீலப்படங்களையும் அரசு இணையதளத்தில் போட்டுவிட்டார்களாம்.

இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற இணையதளமானது ஹேக் செய்யப்பட்டது.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள் : ஜனவரி 2011,

இது நடந்தது துனிசியா நாட்டில். துனிசியா நாட்டில் வறுமை, வேலைவாய்பின்மை மற்றும் கருத்து சுதந்திரமில்லாமை ஆகியவற்றை கண்டித்து இந்த ஹேக்கானது நடத்தப்பட்டது.

அரசாங்க இணையதளத்தை ஹேக்செய்த ஹேக்கர்கள் மேலும் 8 தளங்களையும் ஹேக்செய்து தங்களது கோவத்தை வெளிப்படுத்தினர்.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள்: ஜனவரி 6, 2010

ஆனானப்பட்ட யூடியூப் இணையதளத்தையே ஹேக் செய்திருக்கிறார்கள். ஏதோவொரு யூடியூப் பயனாளர் தனது கணக்கில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதற்காக அவரது கணக்கையே அளித்துள்ளது யூடியூப்.

இதற்கு பழிவாங்கும் விதமாகவே ஹேக் செய்துள்ளனர் ஹேக்கர்கள். இதுபற்றி BBC தொலைக்காட்சியே செய்திவெளியிட்டுள்ளது.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள்: மார்ச் 14, 2011

இதுவொரு ஈமெயில் வகையான ஹேக். அதாவது பேங்க் ஆப் அமெரிக்கா என்ற வங்கியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் bankofamericasucks.com என்ற இணையதளத்திலிருந்து ஈமெயில் அனுப்பப்பட்டது. தவறான தகவல்கள் எதுவுமில்லை.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள்: ஏப்ரல் 2, 2011

சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே ஹேக்கர்கள் தகர்த்திருக்கிறார்கள். இதுகூட பரவாயில்லை. அடுத்த பக்கத்தை பாருங்கள் இந்திய அரசின் நிலைமையை.

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

'ஹேக்' செய்யப்பட்ட பிரபலமான இணையதளங்கள்!

நடந்த நாள்: டிசம்பர் 4, 2010

இந்திய அரசின் சிபிஐ என்ற பாதுகாப்பு அமைப்பின் இணையதளமானது ஹேக் செய்யப்பட்டது. துப்பறியும் மாபெரும் அமைப்பிற்கே இந்த நிலையா என அனைவரும் வேதனைப்பட்டார்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X