கோவிட் 19 பற்றிய சரியான விவரங்களை தெரிந்துகொள்ள உதவும் ட்விட்டரின் CovidVerified.!

|

கொரோனா பாதிப்பு தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த COVID-19 தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் அணுகக்கூடிய தளங்களில் ட்விட்டர் ஒன்றாக இருக்கிறது. ஆக்ஸிஜன் வழங்கல், மருந்து, மருத்துவமனை படுக்கைகள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள மக்கள் இந்த ட்விட்டர் தளத்தை பயன்படுத்துகின்றனர்.

சரியான விவரங்களை தெரிந்துகொள்ள உதவும் ட்விட்டரின் CovidVerified.!

அதிலும் COVID-19 என்று வரும்போது சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மிகவும் அவசியமாக உள்ளது. அதாவது மருந்து வழங்கப்படும் இடங்கள், தேதி போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள மக்கள் இந்த ட்விட்டர் தளத்தை பயன்படுத்துகின்றனர். சரியான
தகவல்கள் இதில் இருந்தால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்நிலையில் CovidVerified எனும் சிறப்பான அம்சம் ட்விட்டர் பக்கதில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சம் பழைய செய்திகள் மற்றம் போலியான தகவல்களை கண்டுபிடிக்க உதவும். அதேசமயம் சரியான இடங்களில் மருந்துகள், ஆக்ஸிஜன்,படுக்கை அல்லது பிளாஸ்மா போன்ற விவரங்களையும் கண்டுபிடிக்க இந்த CovidVerified அம்சம் உதவுகிறது.

கோவிட் வெரிஃபைட் என்பது சரியான தகவல்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் ஒரு கருவியாகும் (tool). இது COVID-19 தொடர்பான ட்வீட்களை சரிபார்க்கிறது. அதேசமயம் காலாவதியான ட்வீட்களை கூட இது எளிமையாக கண்டுபிடித்துவிடும். இந்த புதிய டூலை ஷிகர் சக்சேனா என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.

ஷிகர் சக்சேனா ட்விட்டரில் ட்விட்டரில் அறிமுகம் செய்துள்ள இந்த டூல் பற்றிய முழுவவிரங்களையும் ஒரு ட்விட்டர் பதிவில் விளக்கியுள்ளார். அதாவது இந்த டூல் எப்படி வேலை செய்யும்? எதற்கு பயன்படும்? போன்ற விவரங்களை தெரிவித்துள்ளார் ஷிகர் சக்சேனா. நிறைய பேர் COVID-19 சம்பந்தப்பட்ட சரியான தகவல்களை கேட்டு வருகின்றனர், அவர்களுக்கு இந்த புதிய டூல் கண்டிப்பாக உதவும் எனக் கூறியுள்ளார்.

CovidVerified எவ்வாறு செயல்படுகிறது?
ஒவ்வொரு ட்வீட்டையும் அதன் துல்லியம் மற்றும் காலவரிசை பற்றி அடையாளம் காண்பது ஒரு மிகப்பெரிய பணியாகும். இருப்பினும் கோவிட்வெரிஃபைட் டூல் அதன் முழு செயல்முறையையும் எளிதாக்கியுள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்றால், முதலில் இந்த டூல் ட்விட்டர் API ஐப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் மற்றும் சில நகரங்களுக்கு COVID-19 தொடர்பான முக்கிய வார்த்தைகளுடன் சமீபத்திய ட்வீட்களைப் பெறுகிறது. அடுத்து, வலைத்தளத்திலிருந்து நேரடியாக சரிபார்க்கப்பட்ட அல்லது காலாவதியான ட்வீட்களை பார்க்க வழிசெய்கிறது. இந்த செயல்முறையின் மூலம், கடந்த 24 மணிநேரத்தின் மிகச் சரிபார்ப்புகளைக் கொண்ட ட்வீட்டுகள் எல்லா நேரங்களிலும் மேலே காண்பிக்கப்படும். அதாவது கடந்த 24 மணி நேரத்தில் வெளிவந்த சரியான தகவல்களை பார்க்க வழி செய்கிறது. மேலும் இந்த டூல் காலாவதியான ட்வீட்களை பார்த்து நேரத்தை வீணடிப்பதை விட,சரியான நேரத்தில் அதன் தொடர்புடைய மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களின் ட்வீட்களை சிறப்பாக எடுக்க மக்களுக்கு உதவுகிறது.

CovidVerified ஐ எவ்வாறு பயன்படுத்தலாம்?
வெளிவந்த தகவலின்படி, ட்விட்டர் வழியே உதவி கேட்கும் மக்களுக்கு சரியான ட்வீட்கள் மூலம் உதவி கிடைக்கிறது. அதாவது உங்கள் நகரத்திற்கு தேவையான உதவிகளை கண்டுபிடிக்க ட்வீட் மூலம் வரிசைப்படுத்த CovidVerified உதவும். இதை பயன்படுத்தும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் covidverified.in வழியே உள்நுழைந்து, உங்கள் நகரத்தையும் ஆக்ஸிஜன், படுக்கை அல்லது பிளாஸ்மா போன்ற விருப்பங்களையும் தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-2
அதன்பின்பு உங்களது திரையில் மகிவும் பொருத்தமான மற்றும் சரிபார்க்கப்பட்ட ட்வீட்களின் பட்டியல் விளக்கப்படத்தின் மேலே தோன்றும். அதாவது CovidVerified சரிபார்க்கப்பட்ட மற்றும் காலாவதியான தகவல்களை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த வசதியின் மூலம் நடப்பு தேதியில் சரியான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் இந்த தகவலின் மூலம் பல்வேறு மக்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
CovidVerified on Twitter to help you find the exact details about Covid 19: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X