பரீட்சைக்கு சென்ற தாய்: 6 மாத கைக்குழந்தையை தாய் போல பார்த்து கொண்ட "போலீசார்".! வைரல் வீடியோ.!

குரூப் IV தேர்வு எழுதுவதற்காக தன கைக்குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு வந்த இளம் தாய், அவரின் தங்கையிடம் தனது கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டுத் தேர்வு எழுத உள்ள சென்று விட்டார்.

|

ஹைதெராபாத்: ஹைதெராபாத் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த தாயின் ஆறு மாத கைக்குழந்தையை ஹைதெராபாத் போலீசார் ஆறு பேர் தாய் போல பார்த்துக் கொண்ட இந்தச் சம்பவம், அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.

குரூப் IV தேர்வு

குரூப் IV தேர்வு

குரூப் IV தேர்வு எழுதுவதற்காக தன கைக்குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு வந்த இளம் தாய், அவரின் தங்கையிடம் தனது கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டுத் தேர்வு எழுத உள்ள சென்று விட்டார்.

 தாய் போல பார்த்து கொண்ட காவல்துறை அதிகாரிகள்

தாய் போல பார்த்து கொண்ட காவல்துறை அதிகாரிகள்

தேர்வெழுதச் சென்ற சிறிது நேரத்தில் குழந்தை அழுகத் துவங்கிவிட்டது. எவ்வளவு முயன்றும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை, அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முயற்சியில் மும்முரமாக இறங்கி விட்டனர்.

குழந்தையாய் மாறிய காவலர்

குழந்தையாய் மாறிய காவலர்

குழந்தையின் அழுகையை நிறுத்த முரட்டுக் காவலர்களும் குழந்தையாய் மாறி கைக்குழந்தைக்கு கேளிக்கை கூத்துகள் நடத்தி, பாட்டில் இல் பால் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்தித் தேர்வு முடியும் வரை பத்திரமாக பார்த்துக் கொண்டுள்ளனர்.

 பாராட்டு

பாராட்டு

தேர்வு எழுதி வெளியில் வந்த தாயிடம், அவரின் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு அனைவரும் விடைபெற்றுச் சென்று விட்டனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். வீடியோ பதிவு செய்த அணி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி.

காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கான உண்மை நிகழ்வு என அனைவரும் இந்தச் சம்பவத்தை பாராட்டி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Cops take care of six-month-old baby, mother writes exam in Hyderabad : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X