சாதனங்கள் இல்லாமல் வானில் பறந்த தமிழன்: வைரல் வீடியோ.!

கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மேஜிசியான உள்ளார். இந்த அறிவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வானில் பறந்து நிருபித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் போது அந்த கருவிகளும் பயன்படுத்தாமல்

|

கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் எந்த வித உபகரணங்கள் இல்லாமல் வானில் பறந்துள்ளார்.

இதை அங்கியிருந்தவர்கள் இந்த காட்சியை தங்கள் செல்போன்களின் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.

கோவை மேஜிசியன்:

கோவை மேஜிசியன்:

கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மேஜிசியான உள்ளார். இந்த அறிவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வானில் பறந்து நிருபித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் போது அந்த கருவிகளும் பயன்படுத்தாமல் தானாகவே வானில் பறந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

தனியார் வணிக வளாகம்:

தனியார் வணிக வளாகம்:

கோவை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மேஜிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பார் மாதம் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வானில் பறக்கும் செயலை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வணிக வளாத்தில் மேலே பறந்தார்:

வணிக வளாத்தில் மேலே பறந்தார்:

வணிக வளாகத்தில் பொது மக்கள் மத்தியில் நின்று கொண்டு இவர் திடீரென அங்கியிருந்து மேலே பறக்கிறார். பின்னர் பல மடங்கு உயரத்திற்கு பறப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. எந்த வித உபகரணங்களும் ஏதும் இல்லாமல் அவர் திடீரென மேலே பறந்தாக கூறுகின்றார்.

முகநூலில் பதிவு:

முகநூலில் பதிவு:

இந்த சம்பவத்தை நேரில் பார்தவர்கள் முகநூலில் பதிவு செய்தனர். அது சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பறக்கும் வீடியோவை பார்த்து உள்ளனர். அறிவியல் பூர்வமாகவும் மனரீதியாகவும் பறக்க முடியும் என்று கூறியிருக்கின்றார் வின்ஷேன் பிரபு.

இந்தியாவில் முதல் முறை:

இந்தியாவில் முதல் முறை:

குறிப்பாக தான் இதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் வானில் பறப்பது இந்தியாவில் இதுவே முதன்முறை எனவும் தெரிவித்துள்ளார். இதுபொழுது போக்காக தான் செய்துள்ளேன். இதை யாரும் ஆராய வேண்டாம். வேறு யாரும் இதனை செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

புளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து?

புளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து?

புளுவேல் கேம் விளையாட்டால் உலகம் முழுக்குள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் இறந்தனர். புளுவேல் கேமை நிறைவு பெறும் போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கட்டளையிடும். அதையும் நிறைவேற்றி 50 வது கட்டத்திற்கு சென்றால், அந்த கேம் தற்கொலை செய்யும் அளவுக்கு மனநிலையை உருவாக்கும். தற்போது புளுவேலை கேம்மை போலவே மோமோ என்ற சாவல் விடும் விளையாட்டும் தற்போது உலகம் முழுக்க பரவலாகி வருகிறது.

மோமோ அப்படினா என்ன?

மோமோ அப்படினா என்ன?

கடந்த 2016ல் ஜப்பான் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில், ஒரு பொம்மை உருவம் வைக்கப்பட்டது. இந்த முகம் பேய் பிசாசு போன்று சித்தரிக்கும் வகையில் அவலட்சணம் கொண்டது. வெள்ளை தோலுடன் வீங்கிய கண்களுடன் கொடூரமாக சிரிக்கும் வகையில் உள்ள உருவத்திற்கு பெயர் தான் மோமோ. இவள் நம் மனநிலையை பாதிக்கும் தன்மை கொண்டவள்.

சாவல் விடும் மோமோ:

சாவல் விடும் மோமோ:

நம்மளுடைய ஸ்மார்ட் போனில் திடீரென மோமோ தோன்றும் இந்த மோமோ தைரியம் இருந்தால் என்னுடன் விளையாடுங்கள் என்று சவால் விடலாம். சவாலை ஏற்றால் மன நலனை பாதிக்கும் வகையில், விசியங்கள் கூட நடக்கலாம்.

செய்திகளை அனுப்பும் மோமோ:

செய்திகளை அனுப்பும் மோமோ:

நீங்கள் செய்திகளை மோமோவுக்கு அனுப்பினால் அவளும் பதிலுக்கு செய்திகளை அனுப்புவாள். மேலும் அவள் உங்களின் ரகசியம் மற்றும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வாள். மேலும் மன நிலையை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தும் படங்களை மோமோ அனுப்புவால் என்று மெக்சிகோ காவல் துறை கூறியுள்ளது.

மோமோ சவால் வரும்:

மோமோ சவால் வரும்:

மோமோ சவால் ஆனது பேஸ்புக், வாட்ஸ் ஆப், மெஸ்சேஞ்சர், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் மோமோ சவால்கள் வருவதாக ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் மோமோவுக்கு செய்தி அனுப்பினாலும் பதிக்கு அவள் செய்திகளை அனுப்பி வருகிறார். மேலும் சவாலுக்கு தயாரா என மோமோ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தரங் தகவல்கள் கேட்கும் மோமோ:

அந்தரங் தகவல்கள் கேட்கும் மோமோ:

மோமோ ஆப்பில் இதற்கென்று தனி குரூப்பை உருவாக்கியுள்ளால், அதன் மூலம் மற்றவர்களின் அந்தரங்க வாழ்கைமுறையும் அதுகுறித்து தனிப்பட்ட முறையில் கேட்டு அறிந்து கொள்கிறாள் என்று தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு தகவல்களையும் பரப்பி வருகின்றனர். ஜப்பான் நாட்டில் +81 குறியீட்டு எண்கள், கொலம்பியா நாட்டில் +52 மெக்சிகோ நாட்டில் +52 என்ற குறியீட்டு எண்களுடன் அவர் தொடர்பு கொள்கிறாள் என்று கூறுகின்றனர்.

மோவோவால் சிறுமி பலி:

மோவோவால் சிறுமி பலி:

மோமோவுடன் விளையாடுவதால், உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படும் அபாயம். வன்முறை மற்றும் தற்கொலை செய்ய தூண்டும். பணம் பறிப்பும் செய்யும். தன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா என்று தூக்கமின்மை நோயை உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்க கூடும்.

மோமோ சவால் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி அஜெர்டினாவில் தற்கொலை செய்து கொண்டாள். இந்த விளையாட்டில் ஈடுபட்ட சிறுமியின் முழுவிவரம் குறித்தும் அஜெர்டினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு ஆபத்து:

இந்தியாவுக்கு ஆபத்து:

தற்போது, இந்தியாவுக்கும் மோமோ சவால் விளையாட்டு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் முன் நம் பெற்றோர்களும், இந்திய அரசும் கண் விழித்து அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
coimbatore magician flying in mall viral video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X