அரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு: வாட்ஸ் ஆப்பில் உலா வரும் சர்ச்சை?

பிஇ கஷ்டப்பட்டு படிச்ச நம்ம பயன் பத்து வருஷம் ஆனாலும் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்ட மாட்டான். இதேபோல, ஆசிரியர்களுக்கு லீவு 160 நாள் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு வரை படிச்சாலும், படிக்காவிட்டாலும் பாஸ் பெய

|

கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் அதிமுக நிர்வாகிகள் கூடத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிய ஆசியர்கள் சம்பளம் குறித்து பேசியிருந்தார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸ் ஆப்களில் உலா வருகிறது. இது தற்போது சர்ச்சைக்குரிய பேச்சாக மாறியுள்ளது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கின்றனர்.

 அரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு: வாட்ஸ் ஆப்பில் உலா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் வந்தார். அப்போது சேலம் புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது எந்த ஊடகத்தினரையும் அனுமதிக்கவில்லை.

முதல்வர் பழனிச்சாமி பேச்சு:

முதல்வர் பழனிச்சாமி பேச்சு:

அந்த கூட்டத்தில முதல்வர் பேசியபோது: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அதிக போராட்டம் நடத்தும் மாநிலம் தமிழ்நாடு. அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்ட்டர்களாக இருப்பர்களுக்கு சம்பளம் ரூ. 82 ஆயிரம். அதவாது 5 வகுப்பு ஹெட்மாஸ்டருக்கு சம்பளம் ரூ.82 ஆயிரம்.

பிஇ படிச்ச பயனுக்கு ரூ.50 ஆயிரம்:

பிஇ படிச்ச பயனுக்கு ரூ.50 ஆயிரம்:

பிஇ கஷ்டப்பட்டு படிச்ச நம்ம பயன் பத்து வருஷம் ஆனாலும் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்ட மாட்டான். இதேபோல, ஆசிரியர்களுக்கு லீவு 160 நாள் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு வரை படிச்சாலும், படிக்காவிட்டாலும் பாஸ் பெயில் கிடையாது.

போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்:

போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்:

இந்த பணத்தையும் வாங்கி கொண்டு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்துகின்றனர். கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.14 ஆயிரத்து 819 கோடி சம்பள உயர்வாக கொடுக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரை படி அரசு இவ்வளவு பணத்தையும் கொடுத்துள்ளது. இது கடுமையான சம்பள உயர்வு.

ரூ.60 ஆயிரம் வாங்குகிறான்:

ரூ.60 ஆயிரம் வாங்குகிறான்:

35 ஆயிரம் சம்பளம் வாங்குவனவன் இப்போ 60 ஆயிரம் வாங்குறான். எங்க பிஏ எல்லாம் ரூ.60 ஆயிரம் வாங்கியிட்டு இப்ப 1 லட்சத்து 10 ஆயிரத்து வாங்குறான். எனது பி.ஏ நாங்கள் 1 லட்சத்துக்கு மேல் வாங்குவோம் என்று நினைத்தே பார்கவில்லை என்று சொல்கிறார்.

ரூ. 40 ஆயிரம் அதிகம்:

ரூ. 40 ஆயிரம் அதிகம்:

ரூ.40 ஆயிரம் அதிகம். எவ்வளவு அதிகமாக சேர்த்து கொடுப்பது? எல்லா பணத்தையும் இவர்களுக்கே கொடுத்து விட்டால், மக்களுக்கு என்ன செய்ய முடியும்? இதை எல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் குறித்து முதல்வர் பேசியிருந்தது தற்போது வாட்ஸ் ஆப் பரவலாக வெளிவந்துள்ளதால், புதிய சர்சை வெடித்துள்ளது. இது அரசு பள்ளி தலைமையாசியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
cm palanisamy speech in salem admk office on vairal whats app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X