சின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.! தமிழிசை கிண்டல்!

|

சின்மயி விவகாரம் தற்போது உலகம் முழுக்கவும் பெரும் விஸ்பரூபம் எடுத்துள்ளது. சுசி உட்பட மேலும் சில பெண்கள் விசியத்திலும், கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ளதால், தினம் தினம் புதிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்

#metoo என்ற ஹேஷ்டேக் வைரமுத்து மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வைரமுத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக நடிகர் சித்தார்த் சீமானின் கருத்து போலிதனமானது என்று மூக்கை அறுக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

தற்போது இந்த விசியம் திரை உலகம் மற்றும் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக நடிகர் சரத்குமாரும் சின்மயிக்கு ஆரவாக கருத்து தெரிவித்து இருக்கின்றார். மேலும், தமிழிசை வைரமுத்துவை கிண்டல் அடிக்கும் பாணியில் டுவிட் செய்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பாலியல் குற்றச்சாட்டு :

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்து இசைக்கச்சேரிக்காக சென்ற இடத்தில் தனக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று டுவிட்டரில் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார். இது திரை உலகம் மட்டும் அல்லாமல் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்கவும் இது வைரலாகியுள்ளது.

வைரமுத்து மறுப்பு:

இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து அறியப்பட்டவர்களின் மீது அவதூறு பரப்படும் அநாகரீகம் இப்ப உலகெங்கும் பரவி வருகின்றது என்றும் மறுப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு தக்கபடிலடியாக சின்மயி இதை ரீ டுவிட் செய்தும் இருந்தார். வைரமுத்துவின் பாலியல் தொல்லையில் அவரின் அலுவலகத்தில் இரண்டு பெண்களும், பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டுவிட்டரிலும், பேஸ்புக் லைவிலும் சின்மயி தெரிவித்து இருக்கின்றார். மேலும் வைரமுத்துவால் கல்லூரி படிக்கும் போது, தானும் பாலியில் துன்புறுத்தளுக்கு ஆளாக நேரிட்டது என்று ஒரு இளம் பெண் கூறியதை பத்திரிக்கையாளர் சந்தியாமேனன் என்பவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

சின்மயிக்கு ஆதரவு:

சின்மயிக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழக பாஜ தலைவர் தமிழிசையும் நடிகை சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் திமுக எம்பி கனிமொழியும் சின்மயிக்கு ஆரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

வைரமுத்துவின் தடாலடி டுவிட்:

"என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன்.
அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தாா்.

வைரமுத்துவை கிண்டல் செய்த தமிழிசை:

வைரமுத்து டுவிட் செய்ததுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தமிழக பாஜ தலைவர் தமிழிசை கவிதை பாணியில் கிண்டலும் செய்து டுவிட் வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது:

சந்தி சிரித்தபின் சிந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்து இருந்தார். இதை ஏராளமானோரும் வரவேற்று இருந்தனர்.

நடிகர் சரத்துகுமார் ஆதரவு:

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறுகையில், கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக களத்தில் இறங்கிய சின்மயி-ன் தைரியம் வரவேற்கத்தகக்து. சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறையிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக இளம் வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுசி லீக்ஸ் வீடியோ விளக்கம்:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் சுசி லீக்ஸ் விவகாரம் வைரலானது. அதில், என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்தியிடம் பேசும்போது, மனநிலை சரியில்லாமல் இப்படி செய்து வருகிறார். இதற்காக உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம் என்றார். மேலும், இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் இ-மெயில் மூலமாக அனுப்பி வைத்தார்கள். அப்போது அதனை வெளியிடுவது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அதனால், தான் நான் அதனை வெளியிடவில்லை என்றார். மேலும், தற்போது, இது தொடர்பாக கார்த்திக் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், சின்மயி தொடர்பாக வந்த அத்தனையும், எனது மனைவியின் மனநிலை கோளாறு காரணமாக நடந்த ஒரு தவறு. அதெல்லாம் உண்மையில்லை என்று கூறியிருந்தார். இதுநாள் வரை நான் பொறுமையாக இருந்துவிட்டேன். எதுவாக இருந்தாலும் சரி உண்மை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என்று வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.

சீமான் கருத்து:

வைரமுத்து விவகாரத்தில் ஆண்டாள் பெண்ணாக மாறி தண்டனை கொடுத்து வருகிறார் என்று தமிழிசை கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ''வைரமுத்து கலந்துகொள்ளும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட சின்மயி, அப்போது புகாா் கூறாமல் இப்போது ஏன் குற்றம் சாட்டுகிறாா். இந்த விவகாரம் வெளியான போது, ஆண்டாள் தொடா்பான சா்ச்சையை வைத்து இப்போது வைரமுத்துவிற்கு இப்படி நடந்துள்ளது என்று பாஜகவினர் சொல்வது எல்லாம் திட்டமிட்ட நிகழ்வாக இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார்.

சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்:

சீமானின்இந்த கருத்தை அவரின் மூக்கை அறுக்கும் விதமாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நடிகா் சித்தார்த் செய்த டுவீட்டில் ‘மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து. வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது‘' என்று டுவீட் செய்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
chinmayi issue vairamuthu gets seeman support siddharth tamilisai oppose: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more