இந்தியாவுக்கு போட்டி சீனாவிடம் 48 நவீன டிரோன்களை வாங்கும் பாகிஸ்தான்.! சமாளிக்குமா எஸ்-400 ஏவுகணை?

இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணையை 5 மட்டும் வாங்குகின்றது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் 48 அதி நவீன டிரோன்களை வாங்குகின்றது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சீனாவின் விங்லூங் உடன்

|

இந்தியாவில் நடந்த உச்சி மாநாட்டில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டார். அப்போது ரஷ்யா-இந்தியா இடையே பல்வேறு ஒப்புந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அமெரிக்காவின் தடையை மீறி ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கவும் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

சீனாவிடம் 48 நவீன டிரோன்களை வாங்கும் பாகிஸ்தான்.!

இந்நிலையில் இந்தியாவின் எஸ்-400 ஏவுகணைக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து அதி நவீன விங் லூங்-11 டிரோன்களை வாங்குகின்றது.
இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணையை 5 மட்டும் வாங்குகின்றது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் 48 அதி நவீன டிரோன்களை வாங்குகின்றது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சீனாவின் விங்லூங் உடன் போட்டியை சமாளிக்குமா என்று சந்தேகமும் எழுந்துள்ளது.

உச்சிமாநாடு :

உச்சிமாநாடு :

இந்தியா- ரஷ்யா சார்பில் நட்புறவை பேணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உச்சிமாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு இந்தியாவில் உச்சிமாநாடு நடந்தது. இதில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டார்.

அதில், இந்தியா-ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முதன்மையானதாக கருத்தப்படும் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

 5 வாங்குகின்றது:

5 வாங்குகின்றது:

இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் (5.43 பில்லியன் டாலர்) மதிப்பில் 5 ஏவுகணையை வாங்க இந்தியா இருக்கின்றது. எஸ் 400 டிரையம்ப வகையை சேர்ந்தது. இந்த ஏவுகணை நடமாடும் ஊர்த்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்:

எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்:

இந்திய எல்லையில் சென்சார்கள் பொருத்தி கண்காணிக்கும் போது, இந்திய எல்லைக்குள் டிரோன்கள் மற்றும் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தால், சமிஞை வந்த உடன் 4 வகையில் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது எஸ்-400 ஏவுகணை.

முதல் நிலையில் 400 கி.மீ ஒரு இலக்கையும் , 2ம் நிலையில் 250 கி.மீ இலக்கையும், 3ம் நிலையில் 120 கிமீ இலக்கையும், 4ம் நிலையில் 40 கி.மீ ஒரு இலக்கையும் தாக்கி அழித்து விடும்.

 அமெரிக்காவுக்கும் மீறி ஒப்பந்தம்:

அமெரிக்காவுக்கும் மீறி ஒப்பந்தம்:

இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது. மேலும், இந்தியா உறுதியான நிலைப்பாட்டால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால் சீனாவும், பாகிஸ்தானும் அலறின.

இந்தியாவின் செயலை கண்டு அஞ்சிய பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து 48 அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் முனைப்பு காட்டியது. இதையொட்டி சீனாவும்-பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்துள்ளன.

சீனாவின் விங் லூங்-11 டிரோன்:

சீனாவின் விங் லூங்-11 டிரோன்:

சீனாவிடம் இருந்து விங் லூங்-11 என்ற அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 48 டிரோன்களை பாகிஸ்தான் வாங்க இருக்கின்றது. இந்த டிரோன்களின் மதிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் இதன் விலை குறைந்தாக வே இருக்கும் என்று கூறுப்படுகின்றது.

டிரோன்களின் சிறப்பு:

விங் லூங்-11 டிரோன்களில் ஆளில்லாமல் இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த டிரோனில் பிஏ-7 ஏவுகணையும், வ்வைஇசட்-212 லேசர் வழிகாட்டி வெடிகுண்டு, வ்வைஇசட் 102ஏ ஆன்டி பர்சனல் வெடிகுண்டு, 50 கிலோ கிராம் எடை உள்ள எல்எஸ் 6 மினியேச்சர் வழிகாட்டி குண்டு உள்ளிட்டவை இருக்கின்றன.
இந்த டிரோன்களை ஆளில்லாமல் அதில் பொருத்தியுள்ள அதிநவீன ஏன்டாக்களம் நவீன கேமராக்களின் வாயிலாக இலக்கை தாக்கி அழிக்கும்.

 டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

இந்த விங் லூங்-11 டிரோன் 1,100 கிலோ எடை கொண்டது. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். மேலும் வான் வெளியில் இருந்து கீழே உள்ள 16 ஆயிரம் அடி ( 5 ஆயிரம் மீட்டர்) இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை இருக்கின்றது.

ராணுவ நிலைகளுக்கு குறியா:

ராணுவ நிலைகளுக்கு குறியா:

தற்போது சீனா-இந்தியாவுக்கும் எல்லை பிரச்னை உள்ள நிலையில் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதனால் உடனடியாக பாகிஸ்தானுக்கு 48 விங்லூங்-11 டிரோன்களை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா பாகிஸ்தான் வரை சாலை அமைத்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எஸ்-400 ஏவுகணையை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்த டிரோனை வைத்து இந்திய ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கின்றது என்று அஞ்சப்படுகின்றது.

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு :

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு :

நீண்ட நாட்களாக நட்பு நாடுகளாக உள்ள இந்தியா-ரஷ்யா இதை போற்றும் வகையில் ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடத்தப்படுகின்றது. தற்போது டெல்லியில் நேற்று 19 வது உச்சி மாநாடு நடந்தது. இதில் 2 நாள் பயணமாக இந்தியா வந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் அணு ஆயுதங்களை வாங்க கூடாது இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது. மேலும், எஸ்-400 ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை வாங்கினால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா வெள்ளை மாளிகையும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

திட்டமிட்டபடி கையெழுத்து:

திட்டமிட்டபடி கையெழுத்து:

இந்தியா திட்டமிட்டபடி ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணை, அணு ஆயுதங்கள், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொடர்பான ஒப்பந்தங்களை நேற்று உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒப்பந்தங்களை பரஸ்பரம் செய்து கை மாற்றிக் கொண்டன.

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?

ரஷ்யாவிடம் இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் ( 5.43 பில்லியன் டாலர்) 5 ஏவுகணைகளை வாங்க முன் வந்துள்ளது. எஸ் 400 டிரையம்ப் வகையை சேர்ந்த ஏவுகணைகள் நடமாடும் ஊர்த்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. போர் காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையாக நகரங்களையும் அணு ஆயுதங் அமைப்புகளையும் எதிரிகளின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் தாக்காமல் காக்க முடியும்.

எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்:

இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும். எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்திய சாதனமே எஸ்-400 ஆகும். இதை ரஷ்யாவை சேர்ந்த அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 2007ம் ஆண்டு தயாரித்துள்ளது.

இந்தியா வாங்கும் காரணம்:

இந்தியா வாங்கும் காரணம்:

இந்தியாவை ஒட்டி இருக்கும் பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன. அத்துமீறும் சீனா- பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதங்களையும் முறியடிக்கவே இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதாக இந்திய விமானப்படை தலைவர் பிஎஸ் தானோ தெரிவித்து இருக்கின்றார்.

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்:

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்:

அமெரிக்காவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின்படி ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போர் ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. பொருளாதார தடை உத்தரவை நீக்கும் அதிகாரம் டிரம்புக்கு மட்டும் இருக்கின்றது. இந்தியா பாதுகாப்புக்காகதான் வாங்குகின்றது என்றும் அமெரிக்காவிடம் விளக்கம் கூறியுள்ளது. அமெரிக்காவுடன் இணைக்கமாகவும் செல்வதும் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

நடுங்கும் பாகிஸ்தான், சீனா:

நடுங்கும் பாகிஸ்தான், சீனா:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் எச்சரிக்கையும் மீறி இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியுள்ளது பாகிஸ்தான் மற்றும் சீனாவை கதிகலங்க வைத்துள்ளது. தற்போது ரஷ்யா சீனாவின் பிரிந்து இருக்கும் பீஜிங்கிற்று அதிக எண்ணிக்கையில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஆரம்பித்துள்ளது.

Best Mobiles in India

English summary
China Announces 48 High-End Drones For Pak Days After India's S-400 Deal : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X