கத்தி முனையில் ஏ.டி.எம் பின் கேட்டு இளைஞரிடம் ரூ.45,000 திருட்டு.!

சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த நிறுவன மேலாளராகப் பணிபுரிந்து வரும் அனுராக் ஷர்மா(25), பெங்களூரில் நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு , தாக்கப்பட்டு தன்னிடமிருந்து ரூ.45,000 திருடப்பட்டுள்ளது.

|

சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த நிறுவன மேலாளராகப் பணிபுரிந்து வரும் அனுராக் ஷர்மா(25), பெங்களூரில் நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு , தாக்கப்பட்டு தன்னிடமிருந்து ரூ.45,000 திருடப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடத்தப்பட்ட அனுராக்

கடத்தப்பட்ட அனுராக்

வீடு திரும்ப பேருந்திற்காகக் காத்திருந்த நேரத்தில், மாருதி வேனில் வந்த இருவர் அவரை வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துக் கடத்தியுள்ளனர். அனுராக் உடன் பேருந்து நிலையத்தில் இருந்த இரண்டு பயணிகளும் திடீரென்று அனுராக்கை கடத்த உதவி செய்துள்ளனர்.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்

அனுராக்கை கடத்திய கார் பெங்களூர் தெருக்களில் வளம் வந்துள்ளது. காரின் உள் இருந்த திருடர்கள் அவரை அடித்து மிரட்டி அவரின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வாங்கியுள்ளனர். பின்னர் கத்தி முனையில் அனுராக்கை மிரட்டி அவரின் கார்டுகளுக்கான பின் எண்களை கேட்டு மிரட்டியுள்ளனர்.

ரூ.45,000 திருட்டு

ரூ.45,000 திருட்டு

உயிருக்குப் பயந்து அனுராக் அவரின் ரகசிய பின் எண்களைத் திருடர்களிடம் தெரிவித்துள்ளார். பல ஏ.டி.எம்-களில் ஆம்னி வானை நிறுத்தி ரூ.45,000 வரை திருடியுள்ளனர். அனுராக்கை 7 மணி நேரம் வேனில் கடத்தி வைத்துள்ளனர், பிறகு காலை 8.30 மணி அளவில் அனுராக்கை கை மற்றும் காலை கட்டி நடு சாலையில் இறக்கிவிட்டு அக்கும்பல் தப்பித்து சென்றுள்ளது.

புகார்

புகார்

இச்சம்பவம் குறித்து அனுராக் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் வழங்கி உள்ள புகாரில், தன்னைக் கடத்திய இருவரின் பெயர் ராகுல் மற்றும் உமேஷ் என்றும் அவர்கள் 20 முதல் 25 வயது நிரம்பிய இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
chennai techie taken hostage 8 hours bengaluru robbed rs 45000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X