சிசிடிவியில் சிக்கிய இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி! திருடியது இதற்காகவா?
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, காதால் துவங்கி, திருடர்கள் ஆனா காதல் ஜோடியைப் பற்றித்தான் சமூக வலைத்தளம் முழுதும் இப்பொழுது பேச்சு.
அதிலும் இவர்கள் திருட்டு தொழிலில் களமிறங்கியதற்கான காரணத்தைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி
கரூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ஸ்வாதி என்ற 20 வயது பெண், சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே சென்னையில், உள்ள டாட்டூ கலைஞரான 29 வயதான ராஜு என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிப் பழகிவந்திருக்கிறார்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ராஜு
இருவரின் பழக்கமும் காதலில் முடிவடைந்துள்ளது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ராஜு, பைக் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ராஜு, ஸ்வாதிக்கும் அந்த பழக்கத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

திருட்டு தொழில் கூட்டு சேர்த்தி காதலன்
ஸ்வாதியும் போதை பழக்கத்திற்கு அடிமையானதும், திருட்டு தொழில் அவரையும் கூட்டு சேர்த்திருக்கிறார் ராஜு. போதை பழத்திற்காகவும், கஞ்சா வாங்குவதற்குப் பணத் தேவைப் பட்டதற்காகவும் இருவரும் பல திருட்டு சம்பவங்களைச் சென்னை அண்ணாநகர், சேத்துப்பட்டு போன்ற இடங்களில் சேர்ந்தே செய்து வந்துள்ளனர்.

கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்வாதி
தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஸ்வாதி, கல்லூரி விடுதி அறையில் மது பயன்படுத்தியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். வெளியேற்றப்பட்ட பின் ஸ்வாதியும், ராஜுவும் ஒரே விடுதியில் அரை எடுத்து ஒன்றாகத் தங்கி, திருட்டு தொழிலையும் கஞ்சா பழக்கத்தையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

பெண்ணிடம் செல்போன் பறிப்பு
கடந்த 10 ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திலிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியுள்ளார் ராஜு. அதைப் பயன்படுத்தி ராஜுவும், ஸ்வாதியும் 12 ஆம் தேதி காலை 7 மணியளவில் கிண்டியில் நடந்து சென்ற லிப்சா என்ற பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர்.

சிசிசிடிவி வீடியோ வைரல்
லிப்சா அளித்த புகாரின் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணையைத் துவங்கிய காவல்துறையினருக்கு சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில் உள்ள அடையாளங்களை வைத்து ராஜு மற்றும் ஸ்வாதி தங்கி இருந்த இடத்தை போலீசார் கண்டறிந்து இருவரையும் கைது செய்துள்ளனர். ராஜு மற்றும் ஸ்வாதி செல்போனை திருடும் சிசிசிடிவி வீடியோ வைரல் ஆகியுள்ளது.

அதிர்ச்சி தகவல்
இருவரிடமும் நடத்திய விசாரணையில், கஞ்சா வாங்குவதற்காகப் பல இடங்களில் பைக் மற்றும் செல்போன்களை திருடி அவற்றை நல்ல விலைக்கு விற்று உல்லாசமாக இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கத்திற்காகக் கல்லூரி மாணவி இப்படி மாறியுள்ளது போலீசாருக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களை பாதுகாத்துக்கொள்ள நல்ல அறிவுரை
செல்போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்கள் பேருந்தில் செல்லும் பொழுதும், நடந்து செல்லும் பொழுதும் கைகளில் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் போன்களை வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லதென்று அறிவுரைக்கப்படுகிறது. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் முன் பாக்கெட்டில் போன்களை வைப்பது ஆரோக்கியம் இல்லை என்றாலும், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாத்துக்கொள்ள வேறு வழி இல்லையே மக்களே.


Click it and Unblock the Notifications