இந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு.!

|

மக்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளைத் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலிகளில் அதிகளவு நன்மைகளும் இருக்கிறது, அதே சமயம் சில தீமைகளும் வருகிறது என்று தான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் போலி செய்திகளுக்கு வேண்டி ஐடி சட்டத்தில் புதிய திருத்தம்.!

மேலும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் போலி செய்திகள பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய திருத்தத்தை தற்சமயம் கொண்டுவந்துள்ளது. அது என்னவென்று விரிவாக

பார்ப்போம்.

திருத்தம்-1:

திருத்தம்-1:

ஐடி சட்டத்தில் வந்த புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது அமைதி கருதி வதந்திகளைக் கண்காணித்துப் போலி செய்திகள் என்றால் அவற்றை 24-மணி நேரத்திற்கு சம்மந்தப்பட்ட சமூக வளைதள பக்கம் கண்டிப்பாக நீக்க வேண்டும்.

திருத்தம்-2:

திருத்தம்-2:

அடுத்து போலி செய்திகளை நீக்கியது மட்டுமில்லாமல், அதை பதிவேற்றியது யார் என்று கண்டறிந்து, அவர்கள் குறித்த

விவரங்களையும் சேமித்துச் சம்மந்தப்பட்ட கணக்கின் மீது சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் கட்டாயம் ஆகும்.

திருத்தம்-3:

திருத்தம்-3:

மேலும் போலி செய்திகளை பரப்பியது குறித்த விவரங்களை விசாரணைக்காக 180நாட்கள் வரை கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டும். பின்பு விசாரணை என வரும்போது சமூகவலைதள நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து

செயல்பட்டு உதவ வேண்டும்.

மத்திய அரசு

மத்திய அரசு

குறிப்பாக இந்த புதிய திருத்தங்கள் குறித்துச் சமூக வலைத்தள நிறுவனங்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு இப்போது கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Central government to amend the Information Technology Act: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X