மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்!

|

விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நரேந்திர மோடி புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். இதுவரை யாரும் கண்டிடாத பிரதமரை இந்நிகழ்ச்சியில் காணலாம் என்று புதிய விளம்பரம் ஒன்று வைரல் ஆகிவருகிறது. அது என்ன? எதற்கு என்று தெரிய வேண்டுமா? வாங்க சொல்கிறோம்.

180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு

180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு

Discovery சேனலில் வரும் மேன் Vs வைல்ட் என்ற நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பியர் கிரில்லஸ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி உலகளவில் புகழ்பெற்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் பிழைக் பியர் கிரில்லஸ்

தனியாகக் காட்டிற்குள் இறக்கிவிடப்படும் பியர் கிரில்லஸ், காட்டிற்குள் தங்கி எப்படி அங்கிருந்து தப்பித்து வெளியே வருகிறார் என்பது தான் நிகழ்ச்சியின் கதை. இதற்கு இடையில் காட்டில் தாக்குப்பிடிப்பதற்குப் பச்சையாக மாமிசத்தை வேட்டையாடி உண்பது, எப்படி உயிர் பிழைக்கலாம் என்ற தகவலுடன் நிகழ்ச்சி கதை நகர்கிறது.

நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ?

காட்டிற்குள் சென்று எப்படித் தப்பித்தார் மோடி

காட்டிற்குள் சென்று எப்படித் தப்பித்தார் மோடி

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பியர் கிரில்லஸ் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறுகிறார். ஆமாம் இருவரும் காட்டிற்குள் சென்று எப்படித் தப்பித்து மீண்டு வருகிறார்கள் என்பது தான் அடுத்த வார எபிசோடின் கதை.

தொலைந்த ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டுபிடிப்பது? சூப்பர் டிப்ஸ்!

வைரல் ஆகும் வீடியோ

வைரல் ஆகும் வீடியோ

இந்த எபிசோடிற்கான ப்ரோமோ விடியோவை பியர் கிரில்லஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்நிகழ்ச்சி 180 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும், இதுவரை நரேந்திர மோடி பற்றித் தெரியாத புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளப்போகிறார்கள் என்று பியர் கிரில்லஸ் பதிவிட்டிருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி சமூக வலைத்தளம் முழுதும் பரவி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Catch Man Vs Wild with PM Modi Teaser Went Viral On Social Media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X