வேலை இல்லைன்னு வேற விதமா சொன்னா வேலை கொடுப்போம்.!

உலக சந்தையில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னும் வேலை வாய்ப்பிற்கான போட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் போகிறது.

By Sharath
|
வேலை இல்லைன்னு வேற விதமா சொன்னா வேலை கொடுப்போம்.!

உலக சந்தையில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னும் வேலை வாய்ப்பிற்கான போட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் போகிறது. வேலைக் கிடைக்கவில்லை என்று விரக்தியில் புலம்பும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஏன் கொஞ்ச நாள் நானே புலம்பிட்டு தான் இருந்தேன். நம் நாட்டில் மட்டும் இளைஞர்களுக்கு வேலை இல்லைனு பலர் நினைப்பார்கள், ஆனால் இதே நிலைதான் அனைத்து உலக இளைஞர்களின் நிலைன்னு சொன்ன நீங்க நம்புவீர்களா. வேறு வழி இல்லை நம்பித்தான் ஆகணும் அதன் உண்மை.

முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இளைஞர்களுக்கு வேலை இல்லை தங்க இடம் இல்லை. முந்தைய நாட்களில் வேலைக்கான வாய்ப்பு தான் குறைவாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ ஒரு வேலை வாய்ப்பிற்கு 100 கணக்கான நபர்கள் போட்டியிட்டுக்கொள்ளும் நிலைதான் இங்கு நிகழ்கிறது. ஆனால் இந்த நிலை அனைவர்க்கும் நீடிப்பதில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக நிகழ்ந்துள்ளது இந்த நிகழ்வு.

கலிஃபோர்னியா பிரதேசத்தில் வேலை இல்லாத வீடற்ற ஒரு வெப் டெவலப்பர் செய்த முயற்சி உலக முன்னணி நிறுவங்களை தன் பக்கம் திரும்பி பாக்க வைத்திருக்கிறது. தற்பொழுது அவருடைய சிவி உலக நிறுவனங்கள் மற்றும் வலைத்தளங்கள் முழுதும் பரவிக்கிடக்கிறது. இப்பொழுது அவர் கையில் 200 வேலைக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வேலை இல்லைன்னு வேற விதமா சொன்னா வேலை கொடுப்போம்.!

ஜூலை 27 அன்று, டேவிட் கேசர்ஸ் பூங்கா மேடையில் இருந்து விழித்து, ஒரு சுத்தமான சட்டை மற்றும் டை அணிந்து கொண்டு அருகிலுள்ள நெடுஞ்சாலைக்குச் சென்றார். தன் கைகளால் எழுதிய வாசகம் தன் வாழ்வை மற்றுமொன்று அவர் நினைக்கவில்லை, சில மணி நேரம் அதேஇடத்தில் நின்று உள்ளார்.

அட்டையில் என்ன எழுதி இருந்தார் தெரியுமா, "HOMELESS. HUNGRY 4 SUCCESS. TAKE A RESUME." வீடற்றவன், நான் வெற்றி பசியுடன் இருக்கிறேன் என் ரெஸ்யூம் எடுத்துக்கொள்ளுங்கள் முடிந்தால் வேலைக் கொடுங்கள் என்பது தான் அதன் அர்த்தம்." ஜாஸ்மின் ஸ்கோஃபீல்ட் என்ற பெண்மணி, அவர் அட்டை வாசகத்தை வாசித்தபின் அதைப் போட்டோ எடுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துவிட்டார்.

வேலை இல்லைன்னு வேற விதமா சொன்னா வேலை கொடுப்போம்.!

அவருடைய ரெஸ்யூம் வலைத்தளம் மற்றும் டிவிட்டர் இல் வைரல் ஆகா தொடங்கியது. டேவிட் கேசர்ஸ் டெக்ஸாஸ் எ & எம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை தகவல் அமைப்புகள் பிரிவில் 2004 இல் பட்டம் பெற்றவர். இவருடைய பதிவு ஒரே நாளில் 50,000 முறைக்கு மேல் ரீ-டீவீட் செய்யப்பட்டது. இதன் விளைவாகக் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல தொடக்க நிறுவனங்களும் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இத்துடன் பிட் காய்ன் நிறுவனத்தின் மேலாளர் தன்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு டோக்கியோவில் தொலைதூர வேலை வாய்ப்பையும் வழங்கியதாம்.

உங்கள் வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையுடன் வேறு கோணத்தில் யோசித்து உங்கள் வாழ்வையும் பிரகாசம் அடையச் செய்யுங்கள் என்று டேவிட் கேசர்ஸ் கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
California Homeless Man Receives Hundreds of Job Offers After Holding ‘Hungry for Success’ Placard & Distributing His CVs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X