இந்து கடவுளை அவமதிக்கும் பொருட்கள்: அமேசான் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு.!!

கடந்த ஆண்டில் நடைபெற்றது போல், இந்த ஆண்டும் அமேசான் நிறுவனம் மாபெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

|

உலகின் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமாக அமேசான் கொடிக் கட்டிப் பறக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வலுவான மார்க்கெட்டைக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அமேசான் ஒரு புது சிக்கலில் சிக்கியுள்ளது.

இந்தியத் தேசிய கோடி மற்றும் ஹிந்து மதத்தை அவமானம் செய்யும் விதத்தில் பொருட்களைத் தனது தளத்தில் விற்பனை செய்வதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேசிய கோடி அவமானம்

தனது தளத்தில் ஹிந்து மதத்தைக் கொச்சை படுத்தும் விதத்திலும், இந்தியத் தேசிய கோடியை அவமானப் படுத்தும் விதத்திலும் இரண்டு சின்னங்களையும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாற்றப்பட்டு டிவிட்டர் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

ஹிந்து மதத்தின் சின்னங்கள் அவமானம்

ஹிந்து மதத்தின் சின்னங்கள் அவமானம்

டோர் மேட், செருப்பு, காலணிகள், கழிவறை சீட்டர்களில் தேசியக் கொடியின் படம் மற்றும் ஹிந்து மதத்தின் சின்னங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டித்து அனைவரும் டிவிட்டரில் அமேசானிற்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

#boycottamazon

#boycottamazon

அமேசானை புறக்கணிக்கிறோம் #boycottamazon என்ற ஹேஷ்டேக் உடன் டிவீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை சுமார் ஒரு மணி நேரத்தில் 5,700 நபர்கள் லைக் செய்து ரீடிவீட் செய்துள்ளனர். தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

சிக்கலில் அமேசான்

கடந்த ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் செருப்பில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் இப்படி ஒரு சிக்கலில் அமேசான் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இதுபோன்ற ஒரு சர்ச்சையில் ஸ்னாப்டீல் நிறுவனமும் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நொய்டா போலிஸார்

நொய்டா போலிஸார்

சர்ச்சைக்குரிய வகையில் இந்துக் கடவுள்களை கழிவறை உபயோகப் பொருட்களில் பயன்படுத்திய விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மீது நொய்டா போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Boycott Amazon trends yet again : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X