நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்..

|

மா, பலா மற்றும் வாழை என்பது முக்கனிகள் என்று அழைக்கப்படுகிறது. இதில் வாழைப்பழம் என்பது அதிக சத்துக்கள் கொண்ட ஒரு எளிமையான பழமாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் பல வகையான வாழைப்பழங்கள் கிடைக்கிறது. சரியாக சொல்லப்போனால், 150 க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 1,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது. உலகத்தில் உள்ள வாழைப்பழ வகைகள் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஒரு அதிசயமான மற்றும் அதிசுவையான வாழைப்பழம் தான் இந்த ப்ளூ நிற வாழைப்பழம்.

ப்ளூ நிறத்தில் வாழைப்பழம்

ப்ளூ நிறத்தில் வாழைப்பழம்

வாழைப்பழம் என்றதும் தமிழர்களுக்கு நிச்சயமாக கவுண்டமணி மற்றும் செந்தியில் இணைந்து நடித்து வெளியான 'வாழைப்பழ காமெடி' தான் நினைவிற்கு வரும். ஆனால், இனி அப்படி இல்லை. வாழைப்பழம் என்று கேட்டதும் உங்கள் மனதிற்கு ப்ளூ நிறத்தில் இருக்கும் வாழைப்பழம் தான் நினைவிற்கு வரும். அதிலும் இந்த வாழைப்பழம் வென்னிலா ஐஸ் கிரீம் போலச் சுவைக்கும் என்பதும் உங்கள் மனதில் தோன்றி மறையும். சரி விஷயத்திற்கு வருவோம். இணையத்தில் வைரல் ஆகிவரும் இந்த வாழைப்பழம் எங்குக் கிடைக்கும்.

வினோதமான உண்மை

வினோதமான உண்மை

நீல நிறத்தில் வாழைப்பழங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டதும், இந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு இது எதோ போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று அசால்ட்டாக நினைக்காதீர்கள். உண்மையிலேயே இந்த வாழைப்பழத்தின் தோலும், உள் இருக்கும் பழத்தின் சதைப் பகுதியும் நீல நிறத்தில் தான் உள்ளது. இது பலருக்கு வினோதமாகத் தோன்றலாம், ஆனால் உண்மை என்னவோ இது தான். இந்த வாழைப்பழம் நீல நிறத்தில் தான் உருவாகிறது.

14 முறை சவாரி செய்ய மறுக்கப்பட்ட பார்வையற்ற பெண்.. 1.1 மில்லியன் செலுத்த நீதிமன்றம் UBERக்கு உத்தரவு..14 முறை சவாரி செய்ய மறுக்கப்பட்ட பார்வையற்ற பெண்.. 1.1 மில்லியன் செலுத்த நீதிமன்றம் UBERக்கு உத்தரவு..

ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழம்

ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழம்

இந்த வாழைப்பழத்தை ப்ளூ ஜாவா வாழைப்பழம் என்று அழைக்கின்றனர். சமீபத்தில் இந்த வகையான வாழைப்பழம் இணையத்தைத் தாக்கியது, ஒரு நபர் அதைப் பற்றி விரிவாகப் பேசியபோது, ​​இது உண்மையில் வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ஓகில்வியின் முன்னாள் உலகளாவிய தலைமை படைப்பாக்க அதிகாரி தாம் கை மெங் தனது டிவிட்டர் கைப்பிடியில் "ப்ளூ ஜாவா வாழைப்பழங்களை நடவு செய்ய யாரும் என்னிடம் சொல்லவில்லை? நம்பமுடியாத ஐஸ்கிரீம் சுவையில் இது இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஐஸ்கிரீம் வாழைப்பழம்'

நிபுணர்களின் கூற்றுப்படி, இது முதன்மையாகத் தென்கிழக்கு ஆசியாவில் வளர்க்கப்படுகிறது மற்றும் ஹவாயில் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் இது 'ஐஸ்கிரீம் வாழைப்பழம்' என்று அழைக்கப்படுகிறது. அவர் மேலும் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டார், அங்கு இந்த தனித்துவமான பழத்தைப் பற்றிய அனைத்து விரிவான உண்மைகளையும் கொண்ட ஒரு அமேசோபீடியா இணைப்பைக் குறிப்பிட்டுள்ளார். அமசோபீடியாவின் கூற்றுப்படி, இந்த நீல ஜாவா வாழைப்பழங்கள் விதை வாழைப்பழங்களான மூசா அக்யூமினாட்டா மற்றும் மூசா பால்பிசியானாவின் ட்ரிப்ளோயிட் கலப்பினமாகும்.

இப்படி தான் இது வளர்க்கப்படுகிறதா?

இப்படி தான் இது வளர்க்கப்படுகிறதா?

மேலும், இவை 15 முதல் 20 அடி உயரத்திற்கு வளரக்கூடியது மற்றும் மரத்தின் இலைகள் வெள்ளி-பச்சை நிறத்தில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உகந்த வளர்ச்சிக்கு அவர்களுக்கு 40 பாரன்ஹீட் வெப்பநிலை தேவைப்படுகிறது. பிஜியில், அவை 'ஹவாய் வாழைப்பழம்' என்றும், பிலிப்பைன்ஸில், 'க்ரீ' என்றும், மத்திய அமெரிக்காவில், இவை 'செனிசோ' என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. வாழைப்பழத்தின் இந்த தனித்துவமான மாறுபாட்டை முயற்சிக்க நமக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Blue Java Banana Tastes Like Vanilla Ice-cream Makes Netizens Go Crazy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X