பிஜேபி எம்.பி உட்பட 11 பேரின் மொபைல் திருட்டு! எங்கே திருடப்பட்டது தெரியுமா?

|

முன்னாள் நிதியமைச்சரின் இறுதிச் சடங்கின் போது 11 நபரின் போன்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்டவர்களின் பட்டியலில் பாரதீய ஜனதா எம்.பி. பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலி செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா ஆகியோரும் அடங்குவர்.

திரளான மக்கள் கூட்டத்தில் திருட்டு

திரளான மக்கள் கூட்டத்தில் திருட்டு

ஞாயிற்றுக்கிழமை அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி மொபைல் போன் திருடர்கள் சுமார் 11 பேர்களின் மொபைல் போன்களை திருடியுள்ளனர்.

பாரதீய ஜனதா எம்.பி. மொபைல் திருட்டு

இறுதிச் சடங்கில் திருடப்பட்ட இந்த 11 பேர்களில் பாரதீய ஜனதா எம்.பி. பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலியின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜராவாலா ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக திஜராவாலா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்! 10,000 டாலர் பரிசு!இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்! 10,000 டாலர் பரிசு!

டிவிட்டர் பக்கத்தில் பதிவு

டிவிட்டர் பக்கத்தில் பதிவு

அதுமட்டுமின்றி திஜராவாலா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டிருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது ' இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது அவரின் போனுடன் இன்னும் 10 பேரின் போன்களும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

திருப்போரூர் அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு.! இரும்புக் கடைக்காரரிடம் விசாரணை.!திருப்போரூர் அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு.! இரும்புக் கடைக்காரரிடம் விசாரணை.!

தற்பொழுது அவருடைய போன் உள்ள இடம்

இந்த டிவிட்டர் பதிவில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் திஜராவாலா டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவருடைய போன் எங்கு உள்ளதென்ற இடத்தின் புகைப்படத்தையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். காவல்துறையினர் தற்பொழுது போன் திருடிய திருடர்களை தேடி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BJP MP Among 11 Others Who Lost Their Phones Shock At Arun Jaitley's Funeral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X