அடேங்கப்பா இதை பார்ப்பது ரொம்ப கஷ்டம்.! 100 வயது இராட்சஸ 'மாமோத் மீனை' பிடித்த மீனவர்.! குவியும் பாராட்டு.!

|

டெட்ராய்ட் ஆற்றில் இருந்து ஒரு மீனவர் 108 கிலோ எடையுள்ள ஒரு இராட்சஸ மாமோத் மீனை பிடித்துள்ளார். அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் இந்த அபாரமான மீன்பிடிட்பு பற்றிய புகைப்படம் மற்றும் ஸ்டர்ஜன் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த மீனவர் பிடித்த மீன் சுமார் 108 கிலோ எடை கொண்டது என்றும், அதன் உயரம் சுமார் 7 அடிக்கு அருகில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை பிடிபடாத அரிய வகை மீன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்து தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

இராட்சஸ சைஸ் மீனை அந்த மீனவர்

இராட்சஸ சைஸ் மீனை அந்த மீனவர்

இந்த இராட்சஸ சைஸ் மீனை அந்த மீனவர் இழுத்து அவரின் கப்பலுக்குள் வைக்க ஆறு நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்த மீனவர் அணி, அந்த மீனைப் பிடித்ததும், அது அவர்களை மிக வலிமையாக இழுத்துக்கொண்டே இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் வலு நொடிக்கு-நொடி அதிகமாகிக் கொண்டே போனதாக தெரிவித்துள்ளனர். இது அவர்களின் பணியை மேலும் கடினமாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனை பிடித்த மீனவர் அதன் அருகில் படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகியது.

 240 பவுண்டு எடை.. 6'10

240 பவுண்டு எடை.. 6'10" அடி நீளம்..

இந்த மீனைப் பிடித்த மீனவர் ஒரு உயிரியலாளர் என்பதும், அந்த கப்பலில் இன்னும் சில உயிரியலாளர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ''டெட்ராய்ட் நதி உயிரினக் குழுவினருக்கு 'வாழ்நாளில் ஒரு முறை மட்டும் பிடிபடக் கூடிய ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது, டெட்ராய்ட் நதியின் அசுரன் என்று கூறப்படும் சைஸில், 240 பவுண்டு எடையுடன், சுமார் 6'10" அடி நீளமும், கிட்டத்தட்ட 4' இன்ச் அகலத்திற்குச் செதில்களுடனும் பிடிபட்டுள்ளது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

லேக் ஸ்டர்ஜன் மீன் வகை

லேக் ஸ்டர்ஜன் மீன் வகை

டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட இந்த மீன், அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஏரி ஸ்டர்ஜன் மீன் வகை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரியலாளர்கள் அதன் சுற்றளவு அடிப்படையில் அது ஒரு பெண் மீன் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, மிச்சிகன் இயற்கை வளங்கள் துறை ஒரு பெண் ஸ்டர்ஜன் மீனின் வழக்கமான ஆயுட்காலம் சுமார் 70 முதல் 100 ஆண்டு காலம் என்று கூறியுள்ளது. அதன் உயரமும் எடையும் மட்டும் இந்த பயங்கரமான மீனை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்க வைத்துள்ளது.

100 வயதை தாண்டிய மாமோத் மீன்

100 வயதை தாண்டிய மாமோத் மீன்

இதை 'ஒன்ஸ் இன்-அ லைஃப் டைம் கேட்ச்' என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரியலாளர்களின் கணக்கின் படி, இந்த லேக் ஸ்டர்ஜன் இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல, இந்த மீன் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றும், பாதுகாக்கப்பட வேண்டிய வகை மீன் இனத்தில் இது இடம்பெற்றுள்ளது என்றும் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரியலாளர்கள் பிடித்த 100 வயது மாமோத் மீனை, அவர்கள் ஆய்வுகள் முடிந்தவுடன் அதைப் பத்திரமாகத் தண்ணீரில் விட்டு விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Biologists catch 100-year-old mammoth fish weighing over 108 kg from the Detroit river : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X