Home
Social media

25ஐ விட 63 வயதில் மிகுந்த மகிழ்ச்சி : பில்கேட்ஸ் கூறும் 'அந்த" 4 எளிய ரகசியங்கள்!

சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த நேரடி நிகழ்வில், பில்கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது.

மிக சமீபத்தில் ரெட்டிட் தளத்தில் நடைபெற்ற "என்னிடம் கேளுங்கள்" என்ற நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், கல்விக்கான எதிர்காலம் தொடங்கி காலநிலை மாற்றம் வரை ஏராளமான தலைப்புகளில் இருந்து மனிதாபிமானம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டார்.

25ஐ விட 63 வயதில் மிகுந்த மகிழ்ச்சி: பில்கேட்ஸ் கூறும் 4 எளிய விசயங்க

சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த நேரடி நிகழ்வில், பில்கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது.தற்போது 63 வயதான பில்கேட்ஸை பார்த்து இரண்டு கட்டாய கேள்விகள் கேட்கப்பட்டது. "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" மற்றும் "இவை அனைத்திலும் எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது?"

 20 அல்லது 30 வயதில்

20 அல்லது 30 வயதில்

60 வயதில் உள்ள மகழிச்சிக்கும் 20 அல்லது 30 வயதில் உள்ள மகிழ்ச்சிக்குமான பில்கேட்ஸின் எதிர் நிலைபாடு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவரது 30 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய நோக்கமான "ஒவ்வொரு மேசையில் ஒரு கணினி" மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி " என்பதில் மூழ்கியிருந்தார்.

இரண்டாவது கேள்வி

இரண்டாவது கேள்வி

இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்கையில், " பிள்ளைகள் சிறப்பாக செயல்படும் போது அத்தருணம் மிகவும் சிறப்பான என சிலர் சமீபத்தில் கூறினர். ஒரு பெற்றோராக நான் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். சில நேரங்களில் அதிக உடற்பயிற்சி செய்தல் போன்ற கடமைகள் நமது மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது." என்கிறார் பில்கேட்ஸ்.

"ஒவ்வொரு மேசையில் ஒரு கணினி"

60 வயதில் உள்ள மகழிச்சிக்கும் 20 அல்லது 30 வயதில் உள்ள மகிழ்ச்சிக்குமான பில்கேட்ஸின் எதிர் நிலைபாடு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவரது 30 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய நோக்கமான "ஒவ்வொரு மேசையில் ஒரு கணினி" மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி " என்பதில் மூழ்கியிருந்தார்.

இறுதிநாள் விடுமுறை கூட எடுக்கவில்லை

இறுதிநாள் விடுமுறை கூட எடுக்கவில்லை

ஆனால் அந்த மிஷன் மேம்பட்ட உலகில் தான் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பில்கேட்ஸ் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு பேஸ்புக் இடுகையில்" நான் எனது 20 மற்றும் 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது, மென்பொருள் பற்றி வெறித்தனமாக இருந்தேன். நான் விடுமுறையோ அல்லது வார இறுதிநாள் விடுமுறை கூட எடுக்கவில்லை. மற்றும் நான் திருமணம் செய்து கொள்வதிலும் ஆர்வமாக இல்லை. (ஆனால் நான் மெலிண்டாவை சந்தித்தபோது இது மாறிவிட்டது!)

பில்& மெலிண்டா கேட்ஸ்

பில்& மெலிண்டா கேட்ஸ்

இப்போது தனது குடும்பத்துடன் அனைத்துவித மகிழ்ச்சியையும் அனுபவித்துக்கொண்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறிக்கோள்களை அடைந்தது மட்டுமின்றி, உலகின் தீவிர வறுமை மற்றும் பசியை ஒழிக்கும் நீண்டகால குறிக்கோளை, பில்& மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் நிறைவேற்றிவருகிறார்.

நான் பில்கேட்ஸ் இல்லை

நான் பில்கேட்ஸ் இல்லை

"நான் பில்கேட்ஸ் இல்லை, அவரை போல வாழ்க்கையில் ஆடம்பரங்கள் இல்லை" என கூறாதீர்கள். அவர் கூறும் அந்த மகிழ்ச்சியை அடைய பில்லியனராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பில்கேட்ஸ் போல மகிழ்சியான வாழ்வை அடைய கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய விசயங்கள் இதோ.

1. உங்கள் கடமைகளை பின்தொடரவும்

1. உங்கள் கடமைகளை பின்தொடரவும்

அதிகமான அறிவுசார் ஆற்றல் அல்லது அதிக செல்வத்தை சேர்ப்பதன் மூலம் மட்டுமே ஒருவர்

மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. உங்களின் மிகமுக்கியமான பொறுப்புகளை தேர்வு செய்து அவற்றை பின்தொடர்வதன் மூலம் இதை அடையலாம் என்கிறார் பில்கேட்ஸ்.

2.கொடுக்கும் மனப்போக்கை வைத்திருக்க வேண்டும்

2.கொடுக்கும் மனப்போக்கை வைத்திருக்க வேண்டும்

"மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலமே உங்களிடம் ஏற்கனவே இருப்பதை விட அதிகமானவற்றை நீங்கள் பெற முடியும்" என்கிறார் தன்னம்பிக்கை குரு ஜிம் ரோன். இதை தனது வாழ்வில் பின்பற்றும் பில்கேட்ஸ், தனது பவுண்டேசன் மூலம் ஏராளமான சமூக நல பணிகளை செய்துவருகிறார்.

3. உங்கள் உடலை ஒரு புனிதமான கோவிலைப் போல நடத்துங்கள்

3. உங்கள் உடலை ஒரு புனிதமான கோவிலைப் போல நடத்துங்கள்

உடற்பயிற்சி எப்போதும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார் பில்கேட்ஸ். அவர் ஒரு ஆர்வமான டென்னிஸ் வீரர் ஆவார். மற்றும் ஆராய்ச்சியின் படி, அவர் இதில் துல்லியமாக உள்ளார். உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தம், மனசோர்வு மற்றும் கவலைகளை குறைக்க உடற்பயிற்சி உதவுகிறது.

4. குடும்பத்திற்கு முன்னுரிமை

4. குடும்பத்திற்கு முன்னுரிமை

அவர் பரிந்துரைத்தபடி, கேட்ஸின் முன்னுரிமைகள் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதும் மற்றும் அவரது குழந்தைகள் வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைவதை பார்க்கும் சிறப்பு உணர்வு மட்டுமே. பணியிடத்தை குடும்பத்துடன் ஒப்பிடவே கூடாது. வேலையை விட குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்கமுடியாவிட்டாலும், அதற்கு சமமான நேரத்தை ஒதுக்கி செலவிடவேண்டும். எப்பொதும் குடும்பத்திற்கே முக்கியத்துவம் என்கிறார் பில்கேட்ஸ்.

Best Mobiles in India

English summary
Bill Gates says he's happier at 63 than he was at 25 because he does 4 simple things: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X