பார்தி சாப்ட்பேங் வழங்கும் ஹைக் மெசேஜிங் அப்ளிகேசன்

By Super
|
பார்தி சாப்ட்பேங் வழங்கும் ஹைக் மெசேஜிங் அப்ளிகேசன்

இந்தியாவைச் சேர்ந்த பாரதி டெலிகாம் நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங் டெலிகாம் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் பார்தி சாப்ட்பேங் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றன. தற்போது இந்த பார்தி சாப்ட்பேங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான ஹைக் என்ற மெசேஜிங் அப்ளிகேசனை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது.

இந்த ஹைக் என்ற செய்தி சேவை வாட்ஸ்அப் என்ற அப்ளிகேசனைப் போன்று இருக்கும். இந்த ஹைக் அப்ளிகேசன் மூலம் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அதுபோல் டேட்டாவையும் பரிமாற்றம் செய்ய முடியும்.

மேலும் இந்த அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யாதவர்களுக்குக்காட இந்த அப்ளிகேசன் மூலம் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாக்களை பரிமாற்றம் செய்ய முடியும். ஹைக் அப்ளிகேசனை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக எஸ்எம்எஸ் செய்ய முடியும். அதே நேரத்தில் ஹைக் அப்ளிகேசன் இல்லாதவர்களுக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக 10 எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும்.

அதுபோல் ஹைக் மூலம் வரும் எஸ்எம்எஸ்களுக்கு, ஹைக் அப்ளிகேசன் இல்லாதவர்கள் சாதாரண எஸ்எம்எஸ் சேவை மூலம் பதில் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். மேலும் ஹைக்கில் புதிய உறுப்பினர்களைக் சேர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் 50 வீதம் இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X