இப்படி கூட படம் பார்க்கலாம்: மனைவி கொடுத்த பலே ஐடியா: ரூ.25000 மிச்சம்.! வைரல் பதிவு.!
தற்போதைய சூழலில் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. நாள் முழுக்க ஏதேனும் செய்து கொண்டே மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் போது ஒருகட்டத்தில் உடலும், மனதும் சோர்வடைந்து விடும். சோர்வைப் போக்கி கொள்ள ஏதேனும் செய்தால் மட்டுமே மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
ஒவ்வொருவரும் சோர்வை போக்கி கொள்ள பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். சிலர் சூடான தேநீர் அல்லது குழம்பி (காபி) போன்றவைகளை அருந்திச் சோர்வை போக்கி கொள்வர். சிலர் இசை அல்லது திரைப்படங்கள் போன்றவற்றைப் பார்த்து மனதைப் புத்துணர்வாக்கிக் கொள்வர். அதிலும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக தற்போது உள்ள ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் சாதனங்கள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கின்றன. அதாவது இந்த சாதனஙகள் ஒரு தியேட்டர் அனுபவத்தையே கொடுக்கின்றன என்பதுதான் உண்மை. இந்நிலையில் இணைய வாசியான ரஞ்சித் என்பவரின் மனைவியின் பாராட்டுத்தக்க செயல் ஒன்று அனைத்து வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது மிகவும் பிரபலமான இணையவாசி ரஞ்சித் என்பவர் நிறைய டெக்னாலஜி குறித்த தகவல்களை தம்முடைய சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய மனைவியிடம் நமது வீட்டில் படங்கள் பார்ப்பதற்காக ஒரு rollable motorised projector screen வாங்க வேண்டு என்று கூறி இருக்கிறார். அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் வாங்க 20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும் என்பதையும் அவர் தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இதைக்கேட்ட அவருடைய மனைவி யோசித்த புத்திசாலித்தனமான ஒரு யோசனை தான் தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி வருகிறது. அதாவது பெண்கள் எப்போதுமே வீட்டில் தேவை இல்லாத செலவுகளை கவனித்து அவற்றைக் குறைப்பதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்படிதான் ரஞ்சித்தின் மனைவியும் செய்திருப்பதாகப் பல இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
அதாவது rollable motorised projector screen வாங்க வேண்டும் என தன் மனைவியிடம் ரஞ்சித் கூறியதும், அதை வாங்குவதற்குப் பதிலாக ஏற்கனவே இருந்த பழைய ப்ரொஜெக்டர் உடன் ஒரு வெள்ளை பெட்ஷீட்டை ஸ்கிரீன் ஆக அறையின் அலமாரியில் அழகாக இழுத்து மாட்டியிருக்கிறார் ரஞ்சித்தின் மனைவி. குறிப்பாக இது பழைய காலங்களில் இருப்பது போன்று ஒரு அட்வென்ச்சர் அனுபவத்தைத் தருகிறது என்றே கூறலாம்.
அதேசமயம் ரஞ்சித்துக்கு 25 ஆயிரம் மிச்சமாகி இருக்கிறது. எனவே இப்படி எந்த செலவும் இல்லாமல் மனைவியால் உருவாக்கப்பட்ட இந்த ப்ரொஜெக்டரில் படம் பார்க்கக்கூடிய போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். மேலும் இந்த பதிவை பார்த்த பல்வேறு இணையவாசிகள், எப்போதுமே மனைவி பேச்சை கேட்பதுதான் நல்லது என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல் இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் ப்ரொஜெக்டர் சாதனங்களை அறிமுகம் செய்கின்றன. அதேபோல் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் அந்த ப்ரொஜெக்டரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








