Home
Social media

கடந்த 5ஆண்டு ஆட்சியில் நாட்டில் எங்கும் குண்டுவெடிப்புகள் நிகழ்வில்லை.! குஜராத்தில் மோடி அதிரடி.!

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 75சதவீதம் வாக்குகள் பதிவானது. அந்த வாக்குப்பதிவின்போது ஒரு வன்முறைச் சம்பவம் கூட நிகழவில்லை.

கடந்த 5ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு குண்டுவெடிப்பு கூட நிகழவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமதிதத்துடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5ஆண்டு ஆட்சியில் நாட்டில் எங்கும் குண்டுவெடிப்புகள் நிகழ்வில்லை.

அதன்படி குஜராத் மாநிலம் அம்ரேலியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து மோடி என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.

படேல் சிலை

படேல் சிலை

குஜராத்தில் மறைந்த மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படலேக்கு பிரமாண்ட சிலை கட்டப்பட்டுள்ளது, சர்தார் படேலை தங்களது கட்சியின் தலைவர் என்று காரங்கிரஸ் தெரிவிக்கிறது. ஆனால் அக்கட்சித் தலைவர்கள்
ஒருவர் கூட இதுவரை சர்தார் படேல் சிலையை பார்வையிட வரவில்லை.

கூகுளில் உலகிலேயே மிகப்பெரிய சிலை

கூகுளில் உலகிலேயே மிகப்பெரிய சிலை

குறிப்பாக கூகுளில் உலகிலேயே மிகப்பெரிய சிலை என்று தேடும்போது, சர்தார் படேலின் சிலையின் பெயரும்,
குஜராத்தின் பெயரும் வருவது நமக்கு பெருமையில்லையா? பண்டிட் நேருவை சிறுமைப்படுத்துவதற்கு, சர்தார்
படடேலுக்கு பிரமாண்டமான சிலையை கட்டவில்லை.

 காங்கிரஸ் கட்சிதான்

காங்கிரஸ் கட்சிதான்

பின்பு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படமால் இருப்பதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சிதான், கடந்த காலங்களில், புணே, ஆமதாபாத், ஹைதராபாத், காசி, ஜம்மு ஆகிய இடங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள்
நிகழ்த்தப்பட்டன. ஆனால் கடந்த 5ஆண்டுகால ஆட்சியில் எங்கேனும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததா? தற்சமயம் மக்கள் பாதுகாப்பாக இப்பதாக உணரவில்லையா, ஜம்மு-காஷ்மீரில் இரண்டரை மாவட்டங்களுக்குள்
பயங்கரவாதத்தை கடடுப்படுத்தி விட்டோம் அந்த மாநிலத்தின் பிற பகுதிகளில் அச்சுறுத்தல் சுத்தமாக இல்லை.

75சதவீதம் வாக்குகள்

75சதவீதம் வாக்குகள்

மேலும் காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 75சதவீதம் வாக்குகள் பதிவானது. அந்த வாக்குப்பதிவின்போது ஒரு வன்முறைச் சம்பவம் கூட நிகழவில்லை.

காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது?

காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது?

மும்பையில் 2008-ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, மத்தியில் காங்கிரஸ்தான் இருந்தது,அந்த தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது? பின்பு மும்பை தாக்குதலின்போது மக்கள் அனைவரும் அத்திரத்தில் இருந்தனர். அன்றைய நிலையில் இருந்து காங்கிரஸ் தற்போது மேம்பட்டுள்ளதா?

புல்வமா

புல்வமா

70ஆண்டுகளுக்கு பிறகும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததற்கு காங்கிரஸின் கொள்கைதான் காரணம், புல்வமா தாக்குதலுக்கு பிறகு பாலகோட்டில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானியர்கள்
நான் மோடி என்பதை மறந்துவிட்டனர். முதல்முறையாக பாகிஸ்தான் பாலாகோட் தாகுத்தலுக்கு பிறகு வேதனை
குரல் எழுப்பியது. தொலைபேசி மூலம் என்னை பாகிஸ்தான் தொடர்பு கொண்டது. தயவு செய்து தொலைபேசி
அழைப்பை எடுங்கள் என பாகிஸ்தான் கெஞ்சியது, பாகிஸ்தானை அத்தகைய நிலைக்கு தள்ளியது பாஜக அரசு.

 நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு

பின்னர் நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகவும் குறைவான இடங்களில் காங்கிரஸ் கட்சி தற்போதுதான் போட்டியிடுகிறது. இதை மறந்துவிட்டு நாட்டை மீண்டும் ஆளலாம் என்று காங்கிரஸ்
கனவு காண்கிறது என்று மோடி அவர்கள் பேசினார்.

Best Mobiles in India

English summary
Balakot air strike brought Pakistan to its knees Modi tells voters in Gujarat: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X