Just In
- 5 hrs ago
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- 7 hrs ago
அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ
- 7 hrs ago
நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!
- 8 hrs ago
அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
Don't Miss
- Sports
என்னை மீறி சிக்ஸ் போயிருமா? உசுரைக் கொடுத்து பீல்டிங் செய்து.. மிரள வைத்த வெ.இண்டீஸ் வீரர்!
- News
தனுர் மாதமான மார்கழியில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்
- Movies
அடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்?
- Finance
ரிஸ்க் எடுக்கத் தயாரா..? அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- Lifestyle
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிஜிட்டல் மியூசியம் வசதியுடன் 251 மீட்டரில் உபியில் உருவாகும் உலகின் மிக உயர்ந்த ராமர் சிலை
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேல் அவர்களுக்கு மிகப்பெரிய சிலை வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒரு சிலை உருவாகி வருகிறது. இந்த முறை சிலையை வைப்பது உ.பி. அரசு. இந்த சிலை உலகின் மிக உயரமான சிலையாக உருவாகி வருகிறது. 251 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை ராமர் சிலை ஆகும்.

சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட உயரமாக இருக்கும்
ராமரின் பிறப்பிடமான அயோத்தியில் உருவாக்கப்படும் இந்த சிலை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை விட உயரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

உயரம் சுமார் 700 அடி இருக்கும்
அயோத்தியில் சரயு நதிக்கு அருகில் சுமார் 100 ஹெக்டேர் நிலத்தில் அனைவராலும் வணங்கப்படும் ராமர் சிலை நிறுவப்படும் என்று சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி கூறியுள்ளார். உபி அரசின் செலவில் வைக்கப்படும் இந்த சிலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், ராமரின் சிலை தற்போது மும்பையில் உருவாக்கப்பட்டும் சத்ரபதி சிவாஜி சிலையை விஞ்சும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுஇறது. இந்த சிலையில் உயரம் சுமார் 700 அடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டிஜிட்டல் மியூசியம்
மேலும் இந்த பகுதியில் சிலை மட்டுமின்றி ராமர் குறித்த டிஜிட்டல் மியூசியம், தியானம் செய்யும் இடம், நூலகம், உணவகங்களுடன் கூடிய மால் மற்றும் பார்க்கிங் வசதி போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களும் கொண்டதாக அமையும் என முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.
ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை & அம்சங்கள்)

"ராஜ்கியா நிர்மன் நிகம்"
இந்த சிலையை நிறுவ உத்தரபிரதேச அரசுக்கு தகவல் தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக குஜராத் அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், அதே நேரத்தில் சிலை நிறுவும் நோக்கத்திற்காக "ராஜ்கியா நிர்மன் நிகம்" இன் தனி பிரிவு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள புத்தர் சிலை
கடவுள் ராமர் சிலையானது இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் மற்றொரு சிலையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை என்றும், இந்த சிலைதான் தற்போது உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும், இந்த சிலையின் உயரம் 182 மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் தெரிவித்த முதல்வர், ரூ .3,000 கோடி செலவில் கட்டப்பட்டு நர்மதா ஆற்றின் கரையில் வைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை, அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையின் உயரத்தை விட இரு மடங்கு அதிகமானது என்றும், சீனாவில் உள்ள புத்தர் சிலையை விட உயர்ந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் ராஜஸ்தானின் நாத்வாராவில் மிக உயரமான சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090