பாகிஸ்தானில் 350 தீவிரவாதிகளை துவம்சம் செய்த வீரமங்கைகள் இவர்கள்?

இவர்களை பெற்று எடுத்த பெற்றோருக்கும் தனிச் சிறப்பு தான். என் மகள் ராணுவத்தில் இருக்கின்றாள், அவள் பாகிஸ்தானுக்குள்ளே சென்று 350 தீவிரவாதிகளை கொன்றுவிட்டாள் எல்லா பெற்றோருக்கும் ஓர் பேரும் மகிழ்ச்சி

|

புல்வாமா தாக்குதலுக்கு பலிவாங்கும் விதமாக இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 2 இரண்டு பெண் விமானிகளும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெமினிஸ்ட் என்று சொல்லி உருப்படாத வேலையை செய்யும் பெண்களை விட, நாட்டிற்காக தன் உயிரை பிணயம் வைத்து வேலை தாக்குதலை வெற்றிகரமாக முடித்துள்ள பெண்களை நாம் போற்றித்தான் ஆக வேண்டும்.

பாகிஸ்தானில் 350  தீவிரவாதிகளை துவம்சம் செய்த வீரமங்கைகள் இவர்கள்?

இவர்களை பெற்று எடுத்த பெற்றோருக்கும் தனிச் சிறப்பு தான். என் மகள் ராணுவத்தில் இருக்கின்றாள், அவள் பாகிஸ்தானுக்குள்ளே சென்று 350 தீவிரவாதிகளை கொன்றுவிட்டாள் எல்லா பெற்றோருக்கும் ஓர் பேரும் மகிழ்ச்சிதான். மாதவராக பிறக்க மாதவம் இவர்கள் செய்திருக்க வேண்டும்.

இந்த வீரமங்கைகளுக்கு ஜெய்ஹித் என்ற முழுக்கத்துடனே ஒரு சல்யூட் சொல்லலாம்.

 350 தீவிரவாதிகள் பலி:

350 தீவிரவாதிகள் பலி:

350 தீவிரவாதிகள் பலி: புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்திய விமாப்படை பாகிஸ்தானில் பகுதியில், பதான்கோட், முசாபர் உள்ளிட்ட 3 இடங்களில் மிராஜ் 2000 போர் விமானங்களில் 1000 கிலோ வெடி மருந்துகளுடன் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 350 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

2 பெண் விமானிகள்:

2 பெண் விமானிகள்:

இந்த தாக்குதலில் இரண்டு பெண் விமானிகள் ஈடுபட்டனர். இவர்களின் பெயர்களுடன் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தாக்குதலில் ஈடுபட்ட விமானிகளின் பெயர்களையோ இல்லை புகைப்படத்தையே எந்த ராணுவமும் வெளியிடாது.

அனிதா ஷர்மா:

அனிதா ஷர்மா:

இவர் கையில் ஹெல் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியாகியுள்ளது. "#AnitaSharma துணிச்சலான இந்த வீரரை வாழ்த்துங்கள். பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் இருந்த ஒரே பெண் இவர்தான்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 ஊர்வசி ஜரிவாலா:

ஊர்வசி ஜரிவாலா:

இவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகளை கூண்டோடு அழித்தவர் என்று பகிரப்பட்டு வருகின்றது.
மேலும் அவர், சூரத்தில் உள்ள புல்கா பவனில் படித்தவரென குறிப்பிடப்பட்டுள்ளது.

 பொய் செய்தி:

பொய் செய்தி:

பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய ராணுவமோ, இந்த விமானப் படையோ இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் ராணுவ நடவடிக்கையில் பங்காற்றிய ராணுவத்தினரின் பெயர்களை வெளியிடமாட்டார்கள். இதுவும் பொய் செய்தி தான்.

 அனிதா ஷர்மா அல்ல  அவனி சதுர்வேதி:

அனிதா ஷர்மா அல்ல அவனி சதுர்வேதி:

அனிதா ஷர்மா என்ற புகைப்படத்தில் பகிரப்பட்டவரின் பெயர் அவனி சதுர்வேதி. அதுமட்டுமல்ல, துணை விமானி இல்லாமல் போர் விமாங்களை தனியாக இயக்கும் முதல் பெண் விமானியும் இவர்தான்.

ஊர்வசி ஜரிவாலா அல்ல ஸ்நேகா:

ஊர்வசி ஜரிவாலா என்ற பெயரில் பகிரப்படுபவர் ஸ்நேகா. இவர் தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கு 2007ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பெண் விமானி என ஹைதராபாத் பயிற்சி மைய விருதை பெற்றார். ஸ்நேகா ராஜஸ்தான் ஷேகாவதி பகுதியை சேர்ந்தவர்.

12 விமானிகள் இவர்கள்:

12 விமானிகள் இவர்கள்:

பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்திய 12 விமானிகள் என்று கூறப்படும் புகைப்படத்தில் இருப்பவர்கள் இவர்தான்.

இதுவும் உண்மையல்ல:

இதுவும் உண்மையல்ல:

இந்த புகைப்படத்தில் இருப்பர்களும் உண்மையல்ல . 2015ஆம் ஆண்டு நடந்த இந்திராதனுஷ் பயிற்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ராயல் விமானப் படையும், இந்திய விமானப் படையும் இணைந்து அந்த 10 நாள் பயிற்சியை மேற்கொண்டன. இது பரவலாக பகிரப்படுகின்றது.

பொய்யாக இருந்தாலும் வாழ்த்துங்கள்:

பொய்யாக இருந்தாலும் வாழ்த்துங்கள்:

இவர்களை தவறுதலாக பகிரப்பட்டாலும், இவர்கள் இந்திய விமானியாக இருக்கும் பெண்களுக்கு தனிச் சிறப்பு தான். இவர்களை நாம் கட்டாயம் வாழ்த்தியே ஆக வேண்டும். தன் உயிரை சேத்திற்காக இவர்கள் அர்ப்பணித்துள்ளனர் என்பது தனிச்சிறப்பு. தவறாக பகிரப்பட்டாலும் இவர்களுக்கு புகழ் கிடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Are they the Indian pilots who attacked the Pakistani army? : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X