கிரிக்கெட் வீரர் கோலி மனைவிக்கு அங்கு என்ன வேலை? நெட்டிசன்கள் டுவிட்டரில் கேள்வி.!
இந்தியா அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ளது. போட்டிகளில் விளையாடி வருகிறது. டி-20 போட்டிகளை இந்திய அணியும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் வெற்றுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி. இவருடைய மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுலா செல்லும் இடங்களும் கணவர் கோலியுடன் சென்று வருகிறார்.

அவர் போட்டிகளில் நடக்கும் இடங்களும் சென்று கணவர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து ரசித்து வருகிறார். மேலும் அரங்கத்தில் இருந்து கொண்டு வீராத் கோலிக்கு உற்சாகமும் ஊட்டி வருகிறார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்:
இந்தியா அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ளது. போட்டிகளில் விளையாடி வருகிறது. டி-20 போட்டிகளை இந்திய அணியும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் வெற்றுள்ளன.

தற்போது டெஸ்ட்:
தற்போது இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் டெஸ்தொடரை வெல்வது யார் என்று கடுமையான போட்டா போட்டி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது.

இந்திய அணிக்கு அழைப்பு:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியை லண்டனில் உள்ள இந்திய தூரகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று இந்திய அணி வீரர்கள் சென்றனர்.

புகைப்படத்திற்கு போஸ்:
இந்திய அணியுடன் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தின் முன் தூரக அதிகாரிகளும் போட்டு எடுத்துக் கொண்டனர். அப்போது இந்திய கிரிக் வீரர்களுடன் வீராத்கோலி மனைவியும் இருந்தார்.

நெட்டிசன்கள் கேள்வி:
இந்த புகைப்படத்தை டுவிட்டரில் கண்ட நெட்டிசன்கள், என்ன அனுஷ்கா சர்மா இந்திய அணியில் ஒருவரா? நீங்க ஏன் இந்திய அணியுடன் போஸ் கொடுக்கறீங்க. மற்ற கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் எங்கே. இதை எப்படி பிசிசிஐ அனுமதித்தது என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

பிசிசிஐ அறிவுறுத்தல்:
இதுகுறித்து பிசிசிஐ கருத்துத்து தெரிவித்துள்ளது. வீரர்கள் தங்களின் மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். போட்டிகளில் அதிக கவனம் செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதையறிந்த கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐயின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications