பொன்னியின் செல்வன்.. சோழர்கள் புகழ் பாடிய Anand Mahindra! என்ன சொன்னார் தெரியுமா?

|

மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் இந்திய தொழிலதிபர்களில் பிரதான ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பெரும் புகழ் பெற்றவராக இருக்கிறார். அதோடு துடிப்பான இளைஞர்கள், திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும் இவர் வல்லவராக இருக்கிறார்.

ட்விட்டரில் சிறந்த விஷயங்களை பகிரும் ஆனந்த் மஹிந்திரா தற்போது சோழர்களின் பெருமை குறித்த தகவலை ஷேர் செய்திருக்கிறார்.

ஆக்டிவ் ஆக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா..

ஆக்டிவ் ஆக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா..

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தமிழகத்தின் தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இன்டீரியர் டிசைனர் ஸ்ரவண்யா ராவ், தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து கோவிலில் இருந்தபடியே ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி விளக்குகிறார்.

அதிக விருப்பங்களை பெறும் ட்வீட்..

அதிக விருப்பங்களை பெறும் ட்வீட்..

இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும் 33000க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்று வருகிறது.

தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசியங்களாக அறிவிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டும் காரணத்தை விளக்கச் சொல்லி தமிழகர்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இப்போது உலக நாடுகளும் இது குறித்து பேசத் தொடங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் பாகம் 1

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் திடீரென பேசக் காரணம் தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் தான். பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்டீரியர் டிசைனரான ஸ்ரவண்யா ராவ் இன் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

வீடியோவில் ஸ்ரவண்யா ராவ் தஞ்சை பெரிய கோவிலில் இருந்தபடி பெரிய கோவிலின் சிறப்பம்சங்களை விளக்குகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா அதில் தனது கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரவண்யா ராவ் பகிர்ந்த வீடியோ

ஸ்ரவண்யா ராவ் வீடியோவில் தஞ்சை பெரிய கோவில் குறித்து கூறுகையில், 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலில் இருக்கிறோம். யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக இந்த கோவில் இருக்கிறது.

தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாத காலத்தில் ஆறு கிலோ மீட்டருக்கு சாய்வாக தளம் அமைத்து இந்த கோபுரத்தை கட்டி இருக்கின்றனர்.

முறையாக பிளான் போட்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலானது இதுவரை ஆறு பூகம்பங்களை தாங்கி இருக்கிறது என ஸ்ரவண்யா விளக்கி இருக்கிறார்.

சோழர்களின் சக்தி வாய்ந்த சாதனைகள்..

சோழர்களின் சக்தி வாய்ந்த சாதனைகள்..

ஸ்ரவண்யாவின் இந்த விளக்க வீடியோவை தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அதனுடன் தனது கருத்துகளையும் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.

அதில், சோழப் பேரரசு எவ்வளவு சாதனை படைத்துள்ளது. சோழர்களின் சக்தி வாய்ந்த சாதனை மற்றும் தொழில்நுட்பங்களை இன்னும் நாம் உண்மையில் சரிவர உள்வாங்கவில்லை என்று கருதுகிறேன். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகின் பிற பகுதிகளுக்கு நாம் போதுமான அளவில் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்

பாரம்பரிய தளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆனந்த் மஹிந்திராவின் முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.

சிலர் ஸ்ரவண்யா வீடியோவில் தெரிவித்துள்ள விளக்கங்களில் இருக்கும் சில தவறுகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாஜ்மஹால் 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வளாகம் 44.7 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் ஸ்ரவண்யா இந்த வீடியோவில் 200 தாஜ்மஹால்களை பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் பொருத்த முடியும் அந்த அளவு பெரியது என கூறுகிறார். இது சாத்தியமில்லை என நெட்டிசன்கள் வீடியோவுக்கு பதிலளித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் பாருங்கள், அது நம் பெருமை..

மற்றொரு நபர், சார் சோழ சாம்ராஜ்யம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாருங்கள். அது நம் பெருமை என பதிலளித்துள்ளார்.

ஏராளமானோர் ஆனந்த் மஹிந்திராவை சோழர்களின் பெருமையை அறிய பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்படி பரிந்துரைத்து வருகின்றனர்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

லைகா அளித்த பதில்...

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டு தயாரிப்பில் பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுக்கு லைகா நிறுவனமும் பதிலளித்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என லைகா குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Anand Mahindra's Tweet: Netizens urge to watch Ponniyin Selvan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X