அனகோண்டா முதலையுடன் சண்டையிட்டு விழுங்க முயன்ற வைரல் வீடியோ!
பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், சாதாரண பாம்பிற்கே நடுங்கும் என்றால் அனகோண்டா பாம்பை பார்த்தால் என்னாகும்? நினைத்துப் பார்த்தலே நம் மனது பதைபதைக்கிறது. சமீபத்தில் பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் 6 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பு ஒன்று முதலையைப் பிடித்து விழுங்க முயற்சிக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனகோண்டா பாம்பு
அனகோண்டா பாம்பு என்பது பாம்பு வகையில் மிக பெரிய உருவத்தைக் கொண்டது, ஒரு மனிதனையே முற்றிலுமாக விழுங்கக் கூடியது, குறிப்பாக அனகோண்டா பாம்புகள் நீரிலும் தரையிலும் வாழக்கூடியது. இவை சாதரண மலைப்பாம்பு வகையைச் சார்ந்து என்பதே உண்மை. இந்த ராட்சஸ பாம்புகள் அதன் உருவத்திற்கு ஏற்றார் போல் பெரிய உயிர்களையே வேட்டையாடுகிறது.

அனகோண்டா vs முதலை
அனகோண்டா பாம்புகள் வேட்டையாடும் காட்சிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு கிராமப்பகுதியில் சுமார் 6 அடி நீட்டமுள்ள அனகோண்டா பாம்பு, முதலையை வளைத்துப் பிடித்து விழுங்க முயற்சிக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த வீடியோ காட்சி சிலரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் என்பதால் தைரியமாக உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.
கயிற்றைக் கட்டி இழுத்த மக்கள்
இந்த அனகோண்டா பாம்பு பொன்டா நெக்ரா கிராம பகுதிக்குள் முதலையை தாக்கியுள்ளது. இதனைக் கண்ட ஊர்மக்கள் முதலையை அனகோண்டாவிடம் இருந்து மீட்க முயன்று கயிற்றைக் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் சென்றுள்ளனர். முதலைக்கும் அனகோண்டாவிற்கும் ஒரு நடைபெறும் நேரத்தில் ஊர்மக்களும் அனகோண்டாவுடன் போராடியுள்ளனர்.

வைரல் ஆகும் வீடியோ
ஒருவழியாக நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் முதலையைத் தனது பிடியிலிருந்து அனகோண்டா தன்னை விடுவித்துக்கொண்டது. இறுதியில் முதலை அனகோண்டாவிடம் இருந்து தப்பித்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பின்னர் கயிறு கட்டப்பட்டிருந்த அனகோண்டா பாம்பும் பத்திரமாக வனப்பகுதிக்குள் ஊர்மக்களால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications