வைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்! ஹோலா ஹோலா!
நாய் பிரியர்களுக்கு அவர்களின் செல்லப்பிராணியின் மேல் அதிக பாசம் இருக்கும், அதேபோல் அவர்களின் செல்லப்பிராணிகளை அக்கறையுடன் பார்த்துக் கொள்வதே முழுநேர வேலையாகவும் சிலர் செய்துவருவர்.

அதேபோல் அவர்களின் செல்ல பிராணியான நாய்களுக்கும் அவர்களின் எஜமானர்களை எப்படிப் பாதுகாப்பது என்பது நன்றாகத் தெரியும் அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

பிரபல நடிகரான அமிதாப்பச்சன் தான் இதற்கு கரணம்
இந்த வீடியோ இந்தியாவில் வைரலாவதற்கு முக்கிய காரணமாக முன்னணி பிரபல நடிகரான அமிதாப்பச்சன் காரணமாகி இருக்கிறார். அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒரு இளம் பெண்ணை நீச்சல்குளத்திலிருந்து காப்பாற்றுவது போன்ற வீடியோ ஒன்றை ரீட்வீட் செய்து இருக்கிறார்.

நெட்டிசன்கலின் மனதையும் கவர்ந்த வீடியோ
இந்த வீடியோ பதிவு எப்படி அமிதாப்பச்சனின் மனதை வென்றதோ அதேபோல பல கோடி நெட்டிசன்கலின் மனதையும் கவர்ந்துள்ளது என்றே கூறவேண்டும். முக்கியமாக உலகம் முழுதும் தற்பொழுது இந்த வீடியோ பதிவு வைரல் ஆகிவருகிறது.

நீச்சல் குளத்தில் குதித்த நாய்
நீச்சல் குளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணை அவர் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சற்றும் யோசிக்காமல் நீச்சல் குளத்தில் குதித்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. இளம் பெண்ணை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த நாய் அவரின் தலை முடியை வாயில் பிடித்து அழகாக கவ்வி அவரை கரை நோக்கி இழுத்துச் செல்கிறது. கரையை எட்டும் வரை அந்த நாய் நீந்துவதை நிறுத்தவே இல்லை.
ஹோலா என்ற தலைப்பில் ஷேர் செய்த அமிதாப்பச்சன்
25 வினாடிகள் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை ஆன்ட்ரு ஆல்பர்ட் என்பவர் ஆகஸ்ட் பதிவு 19ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்துப் பிடித்துப்போன அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஹோலா என்ற தலைப்பில் இந்த வீடியோவை ரீட்வீட் செய்திருக்கிறார். ஹோலோ என்பது உற்சாகத்திற்கான ஒரு அடையாள வார்த்தை.

1.3 மில்லியன் மக்கள் பார்த்த வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை, இதுவரை சுமார் 1.3 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சுமார் 96,000 மக்கள் லைக் செய்துள்ளனர் மற்றும் இந்த வீடியோவை சுமார் 23,000 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் கருத்தையும் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications