வயிற்றில் பல்ப் அடித்த தவளை.. குழம்பிய நெட்டிசன்ஸ்! அறிவியல் உண்மை இது தான்!

|

வலைத்தளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று இந்த விசித்திரமான வீடியோ வைரலாகியுள்ளது. இதுவரை யாரும் பார்த்திராத ஒரு நம்ப முடியாது விசித்திரமான வீடியோ இதுவாகும். வயிற்றில் பல்ப் அடிக்கும் தவளையின் பின்னணியில் உள்ள அறிவியல் விளக்கம் என்னவென்று பார்க்கலாம்.

தவளையின் வயிற்றிலிருந்து பிரகாசமான ஒளி

தவளையின் வயிற்றிலிருந்து பிரகாசமான ஒளி

தற்பொழுது வைரலாகியுள்ளது இந்த வீடியோவில் ஒரு தவளை சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், தவளையின் வயிற்றிலிருந்து பிரகாசமான ஒளி விட்டுவிட்டு எரியத் துவங்கியுள்ளது. அதன் வயிற்றுப்பகுதி மட்டும் மின்னுகிறது, தவளையின் வயிற்றில் பல்பு எரியும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

வயிற்றில் பல்பு எரிய காரணம்?

வயிற்றில் பல்பு எரிய காரணம்?

தவளையின் வயிற்றில் பல்பு எரிய காரணம், தவளை ஒரு மின்மினிப் பூச்சியை அப்படியே விளங்கிய பின்னரே ஏற்பட்டுள்ளது என்று இந்த வீடியோவை பதிவு செய்தவர் குறிப்பிட்டுள்ளார். தவளை மின்மினிப் பூச்சியை விழுங்கிய பிற்பாடு அதன் வயிற்றுக்குள் இருக்கும் பூச்சி மீண்டும் உயிர்பெற்று மினுக்க தொடங்கியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தான் அனைவரும் குழம்பியுள்ளனர்.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

அறிவியல் உண்மை

பொதுவாகத் தவளைகள் உண்ணும் பூச்சிகள், அதன் வயிற்றுப் பகுதிக்குச் சென்றவுடன் உயிர் இறந்துவிடும். ஆனால் இந்த வீடியோவில் அப்படி நிகழவில்லை. இது ஒருவேளை பயோலுமினன்ஸ் எனப்படும் கரிம வேதியியல் செயல்முறையின் வேறுபாட்டால் கூட உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதற்குப் பின்னணியில் என்ன அறிவியல் உண்மை இருக்கும் என்று ஆராய்ந்துள்ளனர்.

மீண்டும் உயிர் பெற்ற மின்மினிப்பூச்சி

மீண்டும் உயிர் பெற்ற மின்மினிப்பூச்சி

ஆக்ஸிஜன், கால்சியம் மற்றும் லூசஃபெரின் ரசாயனம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தால் பயோலுமினன்ஸ் என்சைம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒருவகையான பளபளப்பை உருவாக்கியது. இதனால் வயிற்றுப் பகுதியிலிருந்து நிறைய மின்மினிப்பூச்சி வயிற்றுக்குள் மீண்டும் உயிர் பெற்று மினுக்க தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த 14 வினாடி விசித்திரமான வீடியோ சமூக வளையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazing Moment Frog Lights Up After Eating a Firefly : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X