பேஸ்புக் ஆல்பத்தை போஸ்புக்கில் இல்லாதவர்களுக்கு அனுப்ப சில டிப்ஸ்..!

Written By: Jagatheesh

இன்று பேஸ்புக்கில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் அதனை பேஸ்புக்கில் இல்லாதவர்களுக்கும் அனுப்பலாம். அதற்க்கான பல வழிமுறைகள் உள்ளன.
இன்று பேஸ்புக் பாதுகாப்பன முறையில் இல்லாதிருப்பதால் உங்களது தகவல்களை திருட வாய்புள்ளது. அதனால் உங்கள் நண்பர்களுக்கு புகைப்பட ஆல்பங்களை அவர்களுக்கு அனுப்ப சில வழிகள் உள்ளன.

அப்படி என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்ப்போமா...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பகிர்வது எதற்க்காக ?

#1

பேஸ்புக்கில் உங்களது தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள private என்ற ஆப்ஷனைக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் ப்ரைவேட்டில் உள்ள ஆல்பங்களை பேஸ்புக்கில் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பன முறைகளில் அனுப்ப செய்ய வேண்டிய சில டிப்ஸ்களைக் கீழே காணலாம்.

டைம்லைனுக்கு செல்ல

#2

உங்கள் பேஸ்பக்கின் மேல் வலது பக்கத்தில் உள்ள உங்கள் பெயர் மீது கிளிக் செய்தால் அது டைம்லைனுக்கு செல்லும். அதில் photo என டைப் செய்தால் அனைத்து ஆல்பங்களும் வரும் . அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

ஆல்பத்தினைத் தேர்ந்தெடுத்தல்

#3

ஆல்பத்தினைத் தேர்ந்தெடுக்க ஆல்பத்தின் மீது கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அதில் உள்ள அனைத்துப் புகைப்படங்களும் அந்த லிங்க்கில் சேர்ந்து கொள்ளும்.

getlink ஐ பெற செய்ய வேண்டியவை

#4

ஆல்பத்தின் மேல்வலது பக்கத்தில் gear என்ற ஆப்ஷன் உள்ளது . அதனை கிளிக் செய்தால் இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் முதல் ஆப்ஷன் getlink என்றும் delete album என்றும் இருக்கும் . அதில் getlink என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி நீங்கள் ஆல்பத்தின் லிங்க்கைப் பெறலாம்.

லிங்க்கை ஜனரேட் செய்ய

#5

'getlink' என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி அந்த ஆல்பத்தினை எத்தனை நண்பர்களுக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் அனுப்பிக்கொள்ளலாம்.

நினைவில் வைத்திக்கொள்ள வேண்டியவைகள்

#6

பொதுவாக நீங்கள் உங்கள் புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு அனுப்பும் போது அவர்களுக்கு தம்ஸ்நைல் மட்டுமே தெரியும் .அதனால் அவர்களால் அந்த புகைப்படத்தைக் காண முடியாது. அவர்கள் பேஸ்புக்கில் இருந்தால் மட்டுமே அந்த புகைப்படங்களைக் காண முடியும்.

ஒருவேளை நீங்கள் அந்த புகைப்பட ஆல்பத்தின் லிங்கை காப்பிசெய்து அதனை போஸ்புக்கில் இல்லாத ஒருவருக்கு அனுப்பினால் அந்த புகைபட ஆல்பம் மீண்டும் பகிர்ந்து கொள்ளும். அதை அனைவரும் பார்க்க நேரிடும்.

இதுதான் போஸ்புக்கில் புகைப்பட ஆல்பத்தை பகிர்ந்து கொள்ளும் முறை. ஒருவேளை நீங்கள் ஒரு புகைப்படத்தை மட்டும் பகிர விரும்பினால் அந்த புகைப்படத்தின் மீது right click செய்து
getlink என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி அனுப்பலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot