அஜித் 53 புதிய ரெக்கார்ட்...யூடியூப்பில் 1 மில்லியனை நோக்கி...!

Posted By:

இன்னும் பெயரிடப்படாத தல அஜித்தின் 53வது படம் பெரிய எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதை மறுக்கமுடியாது. நேற்று அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன் யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை வெளியிட்டார்.

Click Here For New Gadgets Gallery

அஜித் 53 புதிய ரெக்கார்ட்...யூடியூப்பில் 1 மில்லியனை நோக்கி...!

தல ஸ்பெஷல்: பட தலைப்பு, படங்கள்...ஃபர்ஸ்ட் ஆன் தி நெட்!

இது வெளியாகி 1 நாளே ஆனா நிலையில் 9 லட்சம் பார்வைகளை கடந்து 1 மில்லியன் இலக்கை இன்னும் சில மணிநேரங்களில் தொட்டுவிடும் எனத்தெரிகிறது. இந்தியாவிற்கான யூடியூப் பக்கத்தில் இதுவே தற்பொழுது முதலிடத்தில் உள்ளது. யூடியூப் மட்டுமல்லாது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் பெருமளவில் பகிரப்படுகிறது. இதுவரையிலும் தமிழ் திரைப்பட வீடியோ ஒன்று இவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றநிலையில் இது ரெக்கார்ட் படைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இந்த யூடியூப் டீஸரிலேயே படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை எனவும் தல தெரிவித்துள்ளார். தலைப்பே வைக்காமல் ஒரு படம் இவ்வளவு வரவேற்பை பெற்றது திரைத்துறை சார்ந்தவர்களே பிரமித்து பார்க்கிறார்கள்.

யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை பார்க்க...

<center><center><iframe width="600" height="315" src="http://www.youtube.com/embed/9e_89klM9ek" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Click Here For New Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot